நடிகை பார்வதி திருவொத்து; டைரக்ஷன் படிக்க அமெரிக்கா செல்ல முடிவு
மலையாள முன்னணி நடிகையான பார்வதி திருவொத்து ஃபிலிம் டைரக்ஷன் படிக்க அமெரிக்கா செல்ல முடிவு எடுத்துள்ளாராம்.
தமிழில் பூ, மரியான் மற்றும் பெங்களூர் நாட்கள் ஆகிய படிங்களில் நடித்துள்ளார். சமீபத்தில் இவர் நடித்து உயரே திரைப்படம் விமர்சனரீதியாக நல்ல வரவேற்பை பெற்றது.
இவருக்கு டைரக்ஷன் மீது அதிக ஆசை ஏற்பட்டது. இதையடுத்து தான் நடிக்கும் மலையாள படங்களில் உதவி இயக்குனராகவும் பணியாற்றி வந்துள்ளார்.
இதன் மூலம் டைரக்ஷன் தொடர்பான நுணுக்கங்களை அவர் அறிந்துகொண்டார். முழுவதுமாக இதை கற்க அமெரிக்கா சென்று டைரக்ஷன் கோர்ஸ் கற்க முடிவு செய்துள்ளார்.
டைரக்ஷன் கற்பதற்காக மலையாளத்தில் வந்த இரண்டு பட வாய்ப்புகளையும் மறுத்து விட்டு 6 மாதம் கோர்ஸ் கற்க அமெரிக்கா செல்ல முடிவு செய்து விட்டாராம்.