அஜித்துடன் ஜான்வி; நடிகையுடன் பாம்பே பறக்கும் போனி கபூர்!
மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் கணவர் போனிகபூர். இவர் தற்பொழுது நடிகர் அஜித்தை வைத்து அடுத்தடுத்து இரண்டு படங்களைத் தயாரிக்க உள்ளார்.
இவருடைய மகள் ஜான்வி கபூர் பாலிவுட்டில் ஒரு படத்தில் அறிமுகமாகியுள்ளார். ஆனால் போனிகபூரின் மகள் பாலிவுட்டில் போணியாகவில்லை.
இதனால் அவரைத் தமிழ் படத்தில் அறிமுகம் செய்வது என முடிவு செய்துவிட்டார். ஜான்வி, நடிகர் அஜித்தின் மகளாக பிங்க் ரீமேக்கில் நடிக்க உள்ளார் என்று கூடத் தகவல்கள் வெளியாகின.
இந்நிலையில் கோலிவுட்டில் ஒரு நடிகையை பாலிவுட் பக்கம் அழைத்துச்செல்ல போனிகபூர் முடிவு செய்துள்ளார்.
அவருடைய தயாரிப்பில் பாலிவுட் படம் ஒன்றில் கீர்த்தி சுரேஷ் நடிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
நடிகை மேனகாவின் மகளான கீர்த்தி சுரேஷ் என்ன தான் சிறப்பாக நடித்தாலும், ஒரு சில படங்களைத் தவிர மற்ற அனைத்தும் வசூல் ரீதியாக தோல்விப்படங்களாக மாறியது.
இதனால் அவர் ராசியில்லா நடிகை என தமிழ் சினிமாவில் முத்திரையும் குத்திவிட்டனர். இந்நிலையில் அவரைப் பாலிவுட்டில் அறிமுகம் செய்ய உள்ளார் போனிகபூர்.