Home சினிமா இந்திய சினிமா நடிகர் தனுஷ் – அக்ஷய்குமார் இணையும் புதிய படம்

நடிகர் தனுஷ் – அக்ஷய்குமார் இணையும் புதிய படம்

270
0
நடிகர் தனுஷ் - அக்ஷய்குமார் இணையும் பாலிவுட் படம்

நடிகர் தனுஷ் நடிக்கும் புதிய பாலிவுட்  திரைப்படத்தில் நடிகர் அக்ஷய்குமார் சம்பளம் 120 கோடி ரூபாய் எனத் தகவல் கிடைத்துள்ளது.

பாலிவுட் படத்தில் தனுஷ்

பாலிவுட் இயக்குனர் ஆனந்த் எல் ராய் இதுவரை தனு வெட்ஸ் மனு ஜீரோ திரைப்படத்தின் மூலம் மிக பெரிய புகழை எட்டினார்.

இயக்குனர் ஆனந்த் இயக்கும் புதிய படத்தில் நடிகர் அக்ஷய்குமார் நடிக்க இருக்கிறார். நடிகர் அக்ஷய்குமார் உடன் இணைந்து நடிகர் தனுஷ் மற்றும் சாரா அலிகான் போன்றவர்கள் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடிக்க உள்ளனர்.

அசுர வளர்ச்சியில் அக்ஷய்குமார்

அக்ஷய்குமார் நடிக்கும் திரைப்படங்கள் வசூலில் சக்கை போடு போடுகின்றன. அவரது திரைப்படங்கள் பாலிவுட் திரையுலகை ஆச்சர்யப்பட வைக்கின்றன.

அக்ஷய்குமார் திரைப்படங்களை வாங்குவதற்கு பாலிவுட் சின்னத்திரையுலகில் மிக கடுமையான வாய்க்கால் சண்டையே நடைபெறுகிறது.

அக்ஷய்குமார் சம்பளம்

அக்ஷய்குமார் திரைப்படங்கள் ஒவ்வொன்றும் வசூலிலும், விமர்சனங்களிலும் சக்கைப்போடு போடுகிறது. இதனால் அவரது சம்பளம் ஒவ்வொரு திரைப்படத்திற்கும் உயர்ந்துக்கொண்டே போகிறது.

தற்பொழுது தனுஷ் உடன் இணையும் ஆனந்த் எல் ராய் இயக்கும் திரைப்படத்தில் அக்ஷய்குமார் சம்பளம் ரூபாய் 120 கோடி என பேசப்பட்டு வருகிறது.

போர்ப்ஸ் 2019-ஆம் ஆண்டின் உலகின் அதிக சம்பளம் வாங்கும் நடிகர்களில் அக்ஷய்குமார் 4-ஆம் இடத்தில் பாலிவுட் திரைத்துறை பட்டியலில் இடம் பிடித்து இருக்கிறார்.

அக்ஷய்குமார் தேர்ந்தெடுக்கும் கதை, கதைக்கான நடிப்பு அவரது வருங்காலங்களில் இந்த பட்டியலில் முதல் இடம் பிடிக்கக்கூடும்.

திருநங்கை வேடத்தில் அக்ஷய்குமார்

லஷ்மி பாம் திரைபடத்தில் அக்ஷய்குமார் முதல் முறையாக திருநங்கை வேடத்தில் நடிக்க இருக்கிறார். கைர அட்வானி கதாநாயகியாக நடிக்கிறார்.

நம்ம ராகவா லாரன்ஸ் தான் இந்த படத்தின் இயக்குனர். தமிழில் வெளிவந்து கல்லாவை நிறைப்பிய காஞ்சனா திரைப்படத்தின் ரீமேக் திரைப்படம். வருகிற மே 2020-இல் திரைக்கு வர இருக்கிறது.

Previous articleமாஸ்டர் ரிலீஸ் தேதி க்லூ கொடுத்த ஆண்ட்ரியா
Next articleதெலுங்கில் ரீமேக்: தனுஷின் அசுரன், சேதுபதியின் 96

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here