Home சினிமா இந்திய சினிமா Dil bechara : dil bechara திரைப்படத்தை பற்றிய ஒரு பார்வை!

Dil bechara : dil bechara திரைப்படத்தை பற்றிய ஒரு பார்வை!

534
0

Dil bechara : dil bechara திரைப்படத்தை பற்றிய ஒரு பார்வை! 

” If nothing save us from death, May love atleast save us From life ”

-pablo neruda

The fault in our stars:
The fault in our stars
ஏறத்தாழ இரண்டு வருடங்களுக்கு முன்பு, ஒரு ஞாயிற்றுக்கிழமையில் எனது லேப்டாப்பில் ஒளிக்கவிட்ட திரைப்படம் ‘ the fault in our stars ‘ . திரைப்படத்தை ரசித்து ரசித்து பார்த்துக்கொண்டிருந்தேன். அவ்வபோது கலங்கிய கண்கள், படத்தின் இறுதிகாட்சியில் கண்ணீர் துளிகளை நிலத்தில் விழ வைத்தன. அகஸ்டஸ் (augustus) இறந்ததினால் வந்த கண்ணீரா, அவனின் இறுதி கடித்ததை படித்த பின்பு ஹேசல் (hazel) தரும் புன்னகையால் வந்த கண்ணீரா என்பதை என்னால் அடையாளம் காண முடியவில்லை.
இரண்டு வருடங்களுக்கு பிறகு,
The fault in our stars என்ற அதே திரைப்படத்தை ஹிந்தியில் மறுஉருவாக்கம் செய்து ஹாட்ஸ்டாரில் வெளியிட்டிருக்கிறார்கள். பொதுவாகவே ரீமேக்கின் மீது சலிப்பு தட்டிய நாட்களில்தான் இருந்துக்கொண்டிருக்கிறேன்.
Sushant singh Rajput
இருப்பினும் சுஷாந்த் சிங் மறைவு என்னை Dil becharava-ஐ  பார்க்க தூண்டியது. ஏற்கனவே தனது சில திரைப்படங்களால் என்னில் சுஷாந்த் அவரின் மீதான எதிர்பார்ப்பை விதைத்தார்.
குறிப்பாக சொல்லவேண்டுமென்றால் kai po che திரைப்படத்தை ஒரு பிரபல தமிழ் தொலைக்காட்சியில் தமிழில் டப்பிங் செய்து ஒளிபரப்ப விட்டார்கள்,
அப்போது பிடித்தது சுஷாந்தை. சுஷாந்தின் இறப்பு பலரை வருத்தத்திற்குள் ஆழ்த்தியது அதில் நானும் ஒருவன். சுஷாந்த் மிகச்சிறந்த நடிகர் என்றெல்லாம் நான் கூறப்போவதில்லை ஆனால் சுஷாந்தின் நடிப்பு பிடித்திருந்த பலரில் நானும் ஒருவன்.
Kai po che
ஆதிநாதம்:
Dil bechara
படத்தின் தொடக்க காட்சிகளிலே ஏ.ஆர்.ரஹ்மான் தன் இசைத்துணுக்குகளால் நம்மை ஈர்த்துவிடுகிறார். அதன் பிறகு 45 நிமிடங்கள் கதையில் நிகழ்வதெல்லாம் பல க்யூட் நிகழ்வுகள்தான்.
அந்நிகழ்வுகளினூடே கதைமாந்தர்களின் குணங்களை நம்மில் பதியவைத்து விடுகிறார் இயக்குநர்.
45 நிமிடங்கள் போக மீதமிருக்கும் நேரத்தில் திரைக்கதை நம்முடன் நெருங்கி வந்துக்கொண்டே இருக்கிறது. தனது வாழ்நாளை எண்ணிக்கொண்டிருக்கும் கேன்சர் நோயை உடைய மன்னி ( manny) மற்றும் கிஸி பாஸி (kizie nasi) என்ற இருவருக்கும் இடையே நிகழும் காதல்தான் கதை. ஆனால் கதையின் போக்கு கதைகளில் நிகழும் நிகழ்வு திரைப்படத்தை நம்மோடு இணைக்கிறது. நம்மை அழச்செய்கிறது, காதலை கொண்டாடச்செய்கிறது, இதழ்களில் புன்னகையை விதைக்கிறது.
Manny and kize
விரிவு:
Poem
பாப்லோ நெருடாவின் கவிதை ஒன்றுள்ளது,
“நம்மை இறப்பிலிருந்து எதுவும் காப்பாற்றவில்லை என்றாலும், குறைந்தபட்சம் காதல் நம் வாழ்விலிருந்து நம்மை காப்பாற்றும்”.
நான் இத்திரைப்படத்தை இக்கவிதையின்  விரிவாகவே பார்க்கிறேன்.
the fault in our stars திரைப்படத்தை  நான் எவ்வாறு ரசித்து ரசித்து பார்த்தேனோ, கண் கலங்க பார்த்தேனோ அவ்வாறாகவேத்தான் dil bechara வையும் பார்த்தேன். படத்தின் இறுதிகாட்சிகளில் இம்முறையும் கண்ணீர் துளிகளை தனக்குள்ளே அடக்காமல் நிலத்தில் சிந்த விட்டன என் கண்கள்.
கேள்வியும் பதிலும்:
ஹிந்தியில் the fault in our star மறு உருவாக்கம் செய்யப்படவிருக்கிறது என்ற செய்தியை கேட்டதும் எனக்கு எழுந்த மிகப்பெரிய கேள்வி யாதெனில் ” அத்திரைப்படத்தில் ஹேசல் ஒரு எழுத்தாளரை காண வேண்டும் என்று முயற்சிப்பாள்.  எழுத்தாளர் மற்றும் புத்தகங்கள் சார்ந்த சில காட்சிகள் இருக்கும் அதை எப்படி ஹிந்தி படத்தில் கையாளப்போகிறார்கள்?” என்பதுதான் அது.
dil bechara-வை பார்க்க தொடங்கிய போதும் அந்த கேள்வியும் அந்த ஆவலும் எனக்குள் எழுந்தது. அதற்கு அழகான பதிலாய் இசை இருந்தது. எழுத்தாளர் என்ற term-ற்கு பதிலாக இசையமைப்பாளர் என்ற term -ஐ இத்திரைப்படத்தித் கொண்டுவந்தது எனக்கு ஆச்சரியத்தோடு சேர்ந்து திருப்தியாகவும் அமைந்தது. மேலும்
ரஜினிகாந்த் அவர்களை உபயோகித்த விதம், ‘சரி’ என்ற நம் தமிழ்சொல்லை உபயோகித்ததெல்லாம் கூடுதலாக என்னை கவர்ந்த அம்சங்கள்.
ஏ.ஆர்.ரஹ்மான் :
Ar rahman
திரைப்படம் முழுக்க ஏ.ஆர்.ரஹ்மான் தனது இசையால பயணித்துள்ள விதமென்பது மழையை மேலும் ரசிக்க உதவும் தேநீரைப்போலானது. கதையை நம் மனதிற்கு மிக நெருக்கமாக அமைத்தது படத்தின் இசை என்பதில் எவருக்கும் மாற்று கருத்து இருக்காது.
மீளாதது:
Dance and love
ஏ.ஆர். ரஹ்மானின் குரலில் சுஷாந்த் மேடையில் நடனமாடும் காட்சியென்பது ஒரு வசந்தநிலையை உடையதாகவே எனக்கு தெரிகிறது. அந்த பாடல் முழுவதும் ஓரே ஷாட்டில் எடுக்கப்பட்டது என்கிறார்கள். எவ்வளவு உள்வாங்கல் இருந்திருந்தால் அந்த நிகழ்வு நடந்திருக்குமென்பது விசித்திரத்தை தாண்டி சுஷாந்தின் திறமையையும் அக்காட்சியின் மீதான ஆவலையும் நமக்கு தெரியப்படுத்துகிறது.
Sanjana
திரைப்படத்தில் என்னை அதிகமாக கவரந்தவரென்றால் அது கதாநாயகியான சஞ்சனா அவர்களே. கதாப்பாத்திரத்தின் வடிவமைப்பென்பது சிறப்பென்றாலும் அதை சஞ்சனா கையாண்ட விதம் அழகியல்!
Mukesh chhabra
இத்திரைப்படத்திற்காக இத்திரைப்படத்தின் இயக்குநரான முகேஷ் அவர்களுக்கு பாராட்டுகளையும் வாழ்த்துக்களையும் நாம் நிச்சயமாக கூறியே ஆக வேண்டும். அவர் திரைக்கதையை கையாண்ட விதம், மற்றவர்களிடமிருந்து திரைப்படத்திற்கு தேவையானவற்றை தேவையான அளவே வாங்கிய ஆற்றல் எல்லாம நிச்சயம் பாராட்டுக்குரியதே.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here