Abhirami Venkatachalam; போலி தொல்லை தாங்க முடியவில்லை: டாட்டா காட்டிய பிக் பாஸ் அபிராமி! பிக் பாஸ் மற்றும் நேர்கொண்ட பார்வை ஆகியவற்றின் மூலம் பிரபலமான நடிகை அபிராமி திடீர் முடிவு ஒன்றை அறிவித்துள்ளார்.
நடிகை பிக் பாஸ் அபிராமி திடீரென்று ஒரு முடிவு எடுத்துள்ளார்.
அபிராமி வெங்கடாச்சலத்தின் புனைப்பெயர் யோகினி. கடந்த 1991 ஆம் ஆண்டு மார்ச் 9 ஆம் தேதி பிறந்தார். களவு என்ற படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானார்.
மாடலிங் துறையில் உள்ள ஆர்வத்தால் கடந்த 2017 ஆம் ஆண்டு மிஸ் தமிழ்நாடு அழகிப் போட்டியில் கலந்து கொண்டார். அவரது அழகு மற்றும் சிரிப்பு ஆகியவற்றிற்காக பெமினா மிஸ் தமிழ்நாடு அழகிப் போட்டியில் டைட்டில் வெற்றி பெற்றார்.
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூலம் பிரபலமானவர் நடிகை அபிராமி. இந்நிகழ்ச்சியில் முதலில் கவினை காதலித்தார்.
அதன் பிறகு முகென் ராவ் பின்னாடியே சுற்றினார். இந்நிகழ்ச்சியில் இருக்கும் போதே இவரது நடிப்பில் உருவாகியிருந்த அஜித்தின் நேர்கொண்ட பார்வை படம் திரைக்கு வந்தது.
இந்நிகழ்ச்சியிலிருந்து வெளியேறிய பிறகு நேர்கொண்ட பார்வை படத்தை பார்த்து ரசித்தார். இப்படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்தது.
இந்த நிலையில், எப்போதும் சமூக வலைதளங்களில் சுறுசுறுப்பாக இருக்கும் அபிராமி தற்போது திடீரென்று ஒரு முடிவு எடுத்துள்ளார்.
ஆம், அபிராமி வெங்கடாச்சலம் பெயரில் போலி டுவிட்டர் அக்கவுண்ட், டிக் டாக் அக்கவுண்ட் அதிகரித்து வந்துள்ளது. இதன் காரணமாக அவர் சமூக வலைதளங்களில் இருந்து வெளியேற முடிவு செய்துள்ளார்.
இது குறித்து அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கூறியிருப்பதாவது: தற்போது நான் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் மட்டுமே இருக்கிறேன். ஏனென்றால், இங்குதான் எனக்கு அதிகாரப்பூர்வ அக்கவுண்ட் இருக்கிறது. ஆதலால், எந்தப் பிரச்சனையும் இல்லை. இங்கிருந்தும் கூடிய விரைவில் வெளியேறிவிடுவேன்.
டுவிட்டர் போலி அக்கவுண்ட் போலவே டிக் டாக்கிலும் போலி அக்கவுண்ட் பிரச்சனை தருவதாக அவர் தெரிவித்துள்ளார்.