Home சினிமா கோலிவுட் நடிகர் ஜீவா தனது பெயரை மாற்றினார்

நடிகர் ஜீவா தனது பெயரை மாற்றினார்

350
0

கொரோனா வைரஸ் பற்றி மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக ட்விட்டரில் நடிகர் ஜீவா தனது பெயரை மாற்றி உள்ளார்.

சீனாவில் உருவான கொரோனா வைரஸ் தற்போது  100 நாடுகளுக்கு மேல் பரவி பல லட்சம் மக்களை பாதித்து, பல்லாயிரம் மக்களைக் கொன்று குவித்து வருகிறது..

இதனை கட்டுப்படுத்த பல நாடுகள் பல முயற்சிகளை முன்னெடுத்து வருகின்றனர்.

ஆனால் வைரஸ் கட்டுப்படுவதாகவே தெரியவில்லை இந்த நான்கு வாரத்தில் அதிகரிப்பதாகவே உலக சுகாதார அமைப்பு கூறியுள்ளது.

இந்திய  பிரதமர் மோடி பல முன்னெச்சரிக்கைகள் எடுத்து வருகிறார்.

இந்தியா முழுவதும் 21 நாட்கள் 144 தடை உத்தரவு பிறப்பித்தார். மக்கள் அனைவரும் சுய ஊரடங்கு உத்தரவு இருக்கும்படியும் கேட்டுக் கொண்டார்.

இந்த கொரோனா வைரஸ் அமெரிக்கா, இத்தாலி, ஸ்பெயின் போன்ற நாடுகளில் பெரிதாக பல்லாயிரம் மக்களை கொன்று வருகிறது

தற்போது தமிழக மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் நடிகர் ஜீவா ட்விட்டர் பக்கத்தில் தனது பெயரை உள்ளே போ என்று மாற்றியுள்ளார் தற்போது ட்விட்டரில் வைரலாக இருந்து வருகிறது

ஏற்கனவே ரவிச்சந்திரன் அஸ்வின் டிவிட்டரில் தன் பெயரை மாற்றி விழிப்புணர்வு செய்து வருகிறார்.

கிரிக்கெட் வீரர் ரவிச்சந்திரன் அஸ்வின் தனது ட்விட்டர் பக்கத்தில் “லெட்ஸ் ஸ்டே இன்டோர்” என்ற பெயரை மாற்றினார் என்பது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here