தாய்மார்களின் செல்லப்பிள்ளை தளபதி விஜய்: நடிகை ஆர்த்தி பாராட்டு! விஜய்தான் தமிழக தாய்மார்களின் செல்லப்பிள்ளை என்று நடிகை ஆர்த்தி பாராட்டு தெரிவித்துள்ளார்.
தமிழக தாய்மார்களின் செல்லப்பிள்ளை விஜய்தான் என்று காமெடி நடிகை ஆர்த்தி பாராட்டு தெரிவித்துள்ளார்.
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர் தளபதி விஜய். தனது கடின உழைப்பாலும், விடா முயற்சி, தன்னப்பிக்கையாலும் தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக திகழ்கிறார்.
தொடர்ந்து என் நெஞ்சில் குடியிருக்கும் நண்பா, நண்பிகள் என்று ரசிகர்களை அழைத்து வருகிறார். ஒவ்வொரு படமும் வெளியாகும் போது இசை வெளியீட்டு விழாவில் விஜய்யின் பேச்சைக் கேட்பதற்கு உலகம் முழுவதும் உள்ள ரசிகர்கள் தவமாய் தவமிருக்கின்றனர்.
ரசிகர்கள் மட்டுமல்ல, சினிமா பிரபலங்களும் ஆர்வமாகவே இருப்பது அனைவரும் அறிந்த ஒன்றுதான். அண்மையில், கூட மாஸ்டர் படத்தின் இசை வெளியீட்டு விழாவில் விஜய் கலந்து கொண்டு பேசினார்.
விஜய் குட்டி ஸ்டோரி: எல்லா புகழும் ஒருவன் ஒருவனுக்கே
எல்லா புகழும் ஒருவன் ஒருவனுக்கே.. நீ நதிபோல ஓடிக்கொண்டிரு…வாழ்க்கையும் ஒரு நதி போலத்தான். நதி அதுபாதையில் அதுபாட்டுக்கு ஓடிக்கொண்டிருக்கும்.
சிலர் அதில் விளக்குகளை விட்டு வணங்குவார்கள். சிலர், பூக்களை தூவி வழிபடுவார்கள். இன்னும் சிலர், அதில் கல்லை எறிந்து வழிபடுவார்கள்.
ஆனாலும், நதி அதுபாட்டுக்கு அதுபாதையில் ஓடிக்கொண்டுதான் இருக்கும். அதுபோல நாமும் ஓடிக்கொண்டே இருப்போம். வாழ்க்கையில், வணங்குபவர்களும், வரவேற்பவர்களும், எதிர்ப்பவர்களும் இருப்பார்கள்.
அவர்கள் அவங்கபாட்டுக்கு இருந்துட்டு போகட்டும். நாம், நம்ம வேலையை, கடமையை செம்மையாக செய்துகொண்டே நதிபோன்று போய்க்கொண்டே இருக்க வேண்டும்.
உண்மையாக இருக்க வேண்டுமென்றால், ஊமையாக இருக்க வேண்டியிருக்கிறது…போதும் ஆளவிடுங்கப்பா என்றெல்லாம் கூறி இருப்பார்.
இது போன்று ஒவ்வொரு இசை வெளியீட்டு விழாவிலும் விஜய்யின் பேச்சைக் கேட்பதற்கு எத்தனையோ பேர் ஆவலுடன் இருக்கிறார்கள், இருப்பார்கள்…
மாஸ்டர்
உலகத்தையே அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் காரணமாக 21 நாட்களுக்கு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதால், மாஸ்டர் படம் அறிவித்தபடி ரிலீஸ் ஆவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
ஆதலால், மே மாதத்திற்கு தள்ளி வைக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த நிலையில் ஊரடங்கு உத்தரவு காரணமாக, சினிமா பிரபலங்கள், ஓவியம் வரைவது, சமையல் செய்வது, சமூக வலைதளங்களில் ரசிகர்களுடன் உரையாடுவது என்று எப்போதும் பிஸியாக இருக்கின்றனர்.
தாய்மார்களின் செல்லப்பிள்ளை
அந்த வகையில், நடிகை ஆர்த்தியிடம் ரசிகர் ஒருவர் தளபதி விஜய் பற்றி கூறுங்கள் என்று கேள்வி எழுப்பியுள்ளனர்.
அதற்கு பதிலளித்த ஆர்த்தி கூறியிருப்பதாவது: தமிழக தாய்மார்களின் செல்லப்பிள்ளை என்றும், தளபதி விஜய் தான் அடுத்த சூப்பர் ஸ்டார் என்றும் கூறியுள்ளார்.