Eesha Rebba; ஜிவி பிரகாஷ் பட நடிகை ஈஷா ரெப்பாவிற்கு இன்று பிறந்தநாள்! ஆயிரம் ஜென்மங்கள் படத்தில் நடித்துள்ள ஈஷா ரெப்பா இன்று தனது 30 ஆவது பிறந்தநாளை கொண்டாடுகிறார்.
நடிகை ஈஷா ரெப்பா இன்று தனது 30 ஆவது பிறந்தநாளை கொண்டாடுகிறார்.
கடந்த 1990 ஆம் ஆண்டு ஏப்ரல் 19 ஆம் தேதி ஹைதராபாத்தில் பிறந்தவர் நடிகை ஈஷா ரெப்பா.
எம்பிஏ பட்டதாரியான ஈஷா ரெப்பாவை இயக்குநர் மோகன் கிருஷ்ண இந்திரஹந்தி (Mohan Krishna Indraganti) தெலுங்கு சினிமாவில் அறிமுகம் செய்தார்.
ஈஷா ரெப்பா நடித்த முதல் படம் Anthaka Mundu Aa Tarvatha.
இப்படத்தைத் தொடர்ந்து ஓய் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகம் செய்யப்பட்டார்.
ஓய் படத்திற்குப் பிறகு அமி துமி என்ற தமிழ் படத்திலும் நடித்துள்ளார். இந்த நிலையில், தற்போது ஜிவி பிரகாஷ் நடிப்பில் உருவாகி வரும் ஆயிரம் ஜென்மங்கள் படத்தில் நடித்து வருகிறார்.
தொடர்ந்து தெலுங்கு, தமிழ் சினிமாவில் நடித்து வந்த ஈஷா ரெப்பா கன்னட சினிமாவிலும் அறிமுகமாகியுள்ளார்.
இந்த நிலையில், வளர்ந்து வரும் நடிகைகளில் ஒருவரான ஈஷா ரெப்பா இன்று தனது 30 ஆவது பிறந்தநாளை கொண்டாடுகிறார்.
சினிமா பிரபலங்கள் முதல் ரசிகர்கள், நண்பர்கள் வரை அனைவரும் அவருக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.