நடிகையின் மகிழ்ச்சிக்கு காரணமான கனவுக்கண்ணன்
ஒவ்வொரு வருடமும் கனவுக்கன்னியாக வலம்வர வேண்டும் என்பது அனைத்து நடிகைகளின் விருப்பமாக இருக்கும்.
அதேவேளை பெண்களின் மனதை கவரும் சாக்லேட் பாய் ஹீரோ வெகு சிலரே. எல்லா நடிகர்களுக்கும் பெண்கள் மத்தியில் வரவேற்பு இருக்காது.
ஒரு சில நடிகர்கள் மட்டுமே கனவுக்கண்ணனாக திகழ்வார்கள். அப்படி திகழ்ந்தவர் தான் நடிகர் அரவிந்த்சாமி.
மாப்பிளை எப்படி இருக்கவேண்டும் என்று 80, 90-களில் பெண்களைக் கேட்டால் அரவிந்த்சாமி போன்று என பதில் சொல்வார்கள்.
அந்த அளவிற்கு ஆணழகனாகத் திகழ்ந்தவர் நடிகர் அரவிந்த்சாமி. சிலகாலம் தலை வலுகையாகி சினிமாவை விட்டு ஒதுங்கி இருந்தார்.
தனி ஒருவன் படம் மூலம் முரடுத்தனமான வில்லனாக விஸ்வரூபம் எடுத்தார். வழுக்கைத் தலையை சரி செய்துகொண்டு மீண்டும் ஒரு ரவுண்டு வர ஆரம்பித்துவிட்டார்.
ராஜபாண்டி இயக்கத்தில் ‘கள்ளபார்ட்’ என்ற படத்தில் அரவிந்த்சாமி நடித்துள்ளார். நாயகியாக ரெஜினா நடித்துள்ளார்.
அரவிந்த்சாமியுடன் நடித்தது மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது என படத்தின் நாயகி ரெஜினா கசான்ட்ரா தெரிவித்துள்ளார்.