Shalu Shammu PhotoShoot; எப்போ வாங்குன டவுசர் இப்போ போட்டு சுத்தும் ஷாலு ஷம்மு! வருத்தப்படாத வாலிபர் சங்கம் படத்தில் நடித்த நடிகை ஷாலு ஷம்மு தொடர்ந்து தனது கிளாமரான புகைப்படங்களை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டு ரசிகர்களை கிறங்கடித்து வருகிறார்.
நடிகை ஷாலு ஷம்முவின் லேட்டஸ்ட் போட்டோஷூட் புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
வருத்தப்படாத வாலிபர் சங்கம் படத்தில் சூரிக்கு ஜோடியாக நடித்தவர் நடிகை ஷாலு ஷம்மு. படத்தில் நடிக்கும் போது ஒல்லியாக அடக்கம் ஒடுக்கமான பெண்ணாக தோற்றமளித்தார்.
தற்போது, அவரது புகைப்படங்களைப் பார்க்கும் போது விமர்சிக்கும் வகையில் இருக்கிறது. அரைகுறை ஆடையுடன், படு கவர்ச்சி உடையில் அவ்வபோது இன்ஸ்டாகிராமில் புகைப்படங்களை பதிவிட்டு வருகிறார்.
போதாதகுறைக்கு கிளாமராக டான்ஸும் ஆடி வருகிறார். அந்த வீடியோவை வேறு இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டு ரசிகர்களை கிறங்க வைத்து வருகிறார்.
வருத்தப்படாத வாலிபர் சங்கம் படத்தைத் தொடர்ந்து, சகலகலா வல்லவன், தமிழுக்கு என் ஒன்றை அழுத்தவும் ஆகிய படங்களில் நடித்துள்ளார். தற்போது பட வாய்ப்பு இல்லாததால் தனது கிளாமர் புகைப்படங்களை சமூக வலைதளங்களில் வெளியிட்டு வருகிறார்.
கடந்த சில மாதங்களாகவே ஷாலு ஷம்மு நியூஸ் வராத வெப்சைட்டுகளே இல்லை. அந்தளவிற்கு தினந்தோறும் புகைப்படங்களை பதிவிட்டு வருவதே வழக்கமாக கொண்டுள்ளார். ஆனால், என்ன இதுவரை பட வாய்ப்பு வந்தபாடில்லை.
இந்த நிலையில், அண்மையில், ஷாலு ஷம்மு போட்டோஷூட் செய்துள்ளார். அப்போது எடுக்கப்பட்ட புகைப்படங்களையும் வழக்கம் போல் இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார்.
அதில் அதிகப்படியான மேக்கப், கண்ணில் லென்ஸ், டவுசர் மட்டும் அணிந்தபடி போஸ் கொடுத்துள்ளார். இதைக் கண்ட நெட்டிசன்கள் எப்போது சின்ன வயசுல எடுத்த டவுசரா, இப்போது போட்டுருக்கீங்க என்று விமர்சனம் செய்துள்ளார்.
இப்படியெல்லாம் விமர்சனம் செய்து வரும் நெட்டிசன்களுக்கு ஷாலு ஷம்மு கொரோனா குறித்து வீடியோ வெளியிட்டியிருக்கிறார் என்பது தெரியுமா? என்பது தெரியவில்லை.
எனினும், அவர் வெளியிட்டு வீடியோவில் மன உருகி பேசியுள்ளார். அனைவரையுமே வீட்டிலேயே இருக்க சொல்லி அறிவுரை வழங்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.