Home சினிமா கோலிவுட் ஹாட்ரிக் அடிக்க தயாராகும் ரஜினிகாந்த்: அண்ணாத்த பொங்கல் ரிலீஸ்!

ஹாட்ரிக் அடிக்க தயாராகும் ரஜினிகாந்த்: அண்ணாத்த பொங்கல் ரிலீஸ்!

356
0
Annaatthe Pongal Release

Rajinikanth; ஹாட்ரிக் அடிக்க தயாராகும் ரஜினிகாந்த்: அண்ணாத்த பொங்கல் ரிலீஸ்! பேட்ட மற்றும் தர்பார் ஆகிய படங்களின் வெற்றியைத் தொடர்ந்து பொங்கலுக்கு வெளிவரும் அண்ணாத்த படமும் வெற்றி கொடுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

பேட்ட மற்றும் தர்பார் ஆகிய படங்கள் பொங்கலுக்கு வெளியாகி ஹிட் கொடுத்ததைப் போன்று அண்ணாத்த படம் வரும் 2021 ஆம் ஆண்டு பொங்கலுக்கு வெளிவந்து பிளாக்பஸ்டர் ஹிட் கொடுக்கும் என்று கூறப்படுகிறது.

சிறுத்தை சிவா இயக்கத்தில் ரஜினிகாந்த் தனது 168 ஆவது படமான அண்ணாத்த படத்தில் நடித்து வருகிறார்.

சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிப்பில் உருவாகி வரும் இந்தப் படத்திற்கு இமான் இசையமைக்கிறார்.

அண்ணாத்த படத்தில் ரஜினியுடன் இணைந்து குஷ்பு, மீனா, கீர்த்தி சுரேஷ், நயன்தாரா, சூரி, சதீஷ், வேல ராமமூர்த்தி ஆகியோர் பலர் நடிக்கின்றனர்.

ரஜினியின் அண்ணாத்த படம் இந்த ஆண்டு இறுதிக்குள் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால், நாட்டையே அச்சுறுத்திய கொரோனா வைரஸ் காரணமாக திரையரங்குகள் மூடப்பட்டதோடு படப்பிடிப்புகளும் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. கிட்டத்தட்ட 50 நாட்களாக படப்பிடிப்பு நிறுத்தப்பட்டது.

இதன் காரணமாக ஏற்கனவே அறிவித்தபடி படங்கள் திரைக்கு வருவது கேள்விக்குறியாகியுள்ளது. இந்த நிலையில், அண்ணாத்த படம் குறித்து சன் பிக்சர்ஸ் நிறுவனம் அதிரடியாக அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

அதன்படி, அண்ணாத்த படம் வரும் 2021 ஆம் ஆண்டு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திரைக்கு வரும் என்று தீம் மியூசிக் வெளியிட்டு தெரிவித்துள்ளது.

மேலும், சன் பிக்சர்ஸ் நிறுவனத்தின் டுவிட்டர் பக்கத்தின் கவர் பிக்சரையும் அண்ணாத்த பொங்கல் 2021 என்று இருக்கும்படி மாற்றியமைத்துள்ளது.

இதற்கு முன்னதாக ரஜினி நடிப்பில் 2019 ஆம் ஆண்டு வந்த பேட்ட படமும், 2020 ஆம் ஆண்டு வந்த தர்பார் படமும் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திரைக்கு வந்து ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்றன.

பேட்ட மற்றும் தர்பார் ஆகிய படங்களின் பொங்கல் வரவு ஹிட் கொடுத்ததைப் போன்று 2021 ஆம் ஆண்டு பொங்கலுக்கு வரும் அண்ணாத்த படம் ஹாட்ரிக் கொடுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தற்போது அஜித் நடிப்பில் உருவாகி வரும் வலிமை படம் பொங்கலுக்கு வெளிவந்தால், கண்டிப்பாக பேட்ட VS விஸ்வாசம் படத்தைப் போன்று ஒரு சவாலாக இருக்கும் என்று கூறப்படுகிறது.

அண்ணாத்த படம் பொங்கலுக்கு வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து டுவிட்டரில், விஸ்வாசம் #Viswasam, பேட்ட #Petta, ரஜினிகாந்த் #Rajinikanth, அண்ணாத்த பொங்கல் ரிலீஸ் #AnnaatthePongal2021 ஆகிய ஹேஷ்டேக்குக்ள் டிரெண்டாகி வருகிறது.

Rajinikanth Annaatthe

SOURCER SIVAKUMAR
Previous articleகொரோனாவால் 17,000 சிறைக்கைதிகளை விடுவிக்க முடிவு: மராட்டியம்
Next article13/5/2020 ராசிபலன்: இன்றைய தின ராசிபலன் – Horoscope Tamil

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here