டிவிட்டரில் அஜித்: கையெழுத்து கடிதம் வெளியானது. அஜித் சமூக வலைதளம் பக்கங்களில் இணைவதாக கையெழுத்துடன் கூட செய்தி வெளியானது உண்மையா?
அஜித் சமூக வலைதளம்
சில வருடங்களுக்கு முன்பு அஜித் பெயரில் ட்விட்டர், பேஸ்புக் பக்கங்களில் ப்ளூ டிக் கொண்ட புரொபைல் கிரியேட் செய்யப்பட்டது.
அது, அஜித் ரசிகர்களால் கொண்டு வரப்பட்டது. உடனே அஜித் இது தொடர்பாக நடவடிக்கை எடுத்து அந்த பக்கங்களில் உள்ள புளூ டிக்-யை நீக்க உத்தரவிட்டார்.
கையெழுத்துடன் கடிதம்
நேற்று அஜித் சமூக வலைதளங்களில் இணையப்போவதாக கையெழுத்துடன் கூடிய கடிதம் ஒன்று இணையத்தில் வெளியாகியது.
இத்தனை நாள் பொது இடங்களில் வருவதை தவிர்த்த அஜித் என்ன இப்படி தீடீர் முடிவு எடுத்துள்ளார் என விசாரணையின் இறங்கியது நம் மிஸ்டர் புயல் டீம்.
பின்னர் தான் தெரிந்தது? அது போட்டோ ஷாப் கில்லாடிகளின் வேலை என்று. அஜித்தின் கையெழுத்தை பயன்படுத்தி மர்ம நபர்கள் போலியான கடிதம் ஒன்றை அனுப்பி உள்ளனர்.
அஜித் முடிவுவில் உறுதி
அஜித் பொது வாழ்க்கையில் இருந்து ஒதுங்கி இருப்பது என அவர் எடுத்த முடிவில் இன்னும் உறுதியாக உள்ளார்.
ஒரு மிக்கப்பெரிய அதிசயம் நடந்தால் மட்டுமே அஜித் அரசியலிலோ அல்லது பொது விழா மேடைகளிலோ தோன்றுவார்.