Ajith Ruling Helo No 1; நம்பர் ஒன் இடத்தில் தல: கொண்டாடும் அஜித் ரசிகர்கள்! ஹலோ ஆப்பில், தல அஜித் நம்பர் ஒன் இடத்தைப் பிடித்துள்ளதை அஜித் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.
அஜித் நம்பர் ஒன் இடம் பிடித்துள்ளதைத் தொடர்ந்து தல ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.
சமூக வலைதளங்களில் எப்போதும், ரசிகர்கள் அடித்துக் கொள்வது வழக்கம். அந்த வகையில், அஜித் படங்களை விஜய் ரசிகர்கள் விமர்சிப்பதும், விஜய் படங்களை அஜித் ரசிகர்கள் விமர்சிப்பதும் காலங்காலமாக நடந்து வருகிறது.
அஜித், விஜய் இருவரும் நண்பர்களாக இருந்தாலும், அவர்களது ரசிகர்களுக்கு அது புரிவதில்லை. மாறாக எதிரிகளாகவே இருக்கின்றனர்.
அஜித்தைப் பற்றி விஜய் புகழ்ந்து பேசுவதும், விஜய்யைப் பற்றி அஜித் புகழ்ந்து பேசுவம் நடந்து வருகிறது.
அப்படியிருக்கும் இந்த ரசிகர்கள் மட்டும் ஏன் அடித்துக்கொள்கிறார்கள் என்பது யாருக்கும் புரியவில்லை.
விஜய்யைவிட அஜித் ரசிகர்கள் எப்போதும் தல மட்டுமே நம்பர் ஒன் இடத்தில் இருக்க வேண்டும் என்று ஆசைப்படுவார்கள். அதற்கேற்பவும் ரசிகர்கள் தீவிரமாக முயற்சியில் ஈடுபடுவார்கள்.
விஜய் ரசிகர்கள் ஒன்றும் சலித்தவர்கள் அல்ல. இருவருக்கும் இடையில் கடும் போட்டி இருக்கும். ஆனால், அஜித் ரசிகர்கள் அவரது ஒவ்வொரு படத்தையும் சமூக வலைதளங்களில் டிரெண்டாக்கி டிரெண்டாக்கி அவரை நம்பர் ஒன் இடத்திலேயே வைக்கின்றனர்.
அந்த வகையில், தற்போது ஹலோ ஆப்பில் தல அஜித் நம்பர் ஒன் (Ajith Ruling Helo) இடத்தைப் பிடித்துள்ளார்.
தொடர்ந்து அஜித் ரசிகர்கள்,
இனி எமனே வந்து தடுத்தாலும் தலையை கீழே இறக்க முடியாது.. நாங்கதான் எப்போவுமே கெத்து,
அஜித்தை எங்கேயும் தோற்கவிடமாட்டோம் என்று இருப்பவர்கள் இங்கே ஓட்டு போடுங்கள்…
நமது உயிருக்கு மேலான தல அஜித்தை ஜெயிக்க வைப்போம் ஓட்டு போடுங்கள்…
என்றெல்லாம் தல அஜித் ரசிகர்கள் ஹலோவில் பதிவிட்டு வருகின்றனர்.
இதற்கிடையில், இன்று டுவிட்டரில், #அஜித்தைபின்தொடரும்விஜய் என்ற ஹேஷ்டேக் டிரெண்டாகி வருகிறது. ஆம், அஜித் ஏற்கனவே கொரோனா பாதித்த மக்களுக்கு உதவும் வகையில் ரூ.1.33 கோடி வரையில் நிதியுதவி அளித்திருந்தார்.
இதையடுத்து, தற்போது விஜய் ரூ.1.3 கோடி நிதியுதவி அளித்துள்ளதைத் தொடர்ந்து அஜித்தை விஜய் பின்பற்றுகிறார் என்று ரசிகர்கள் கூறி வருகின்றனர்.
மேலும், மாஸ்டர் இசை வெளியீட்டு விழாவின் போது அஜித்தைப் போன்று உடை அணிந்து வர வேண்டும் என்பதற்காக கோட் சூட்டில் வந்ததாக தெரிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.