Home சினிமா கோலிவுட் சென்னையில் பிறந்த ஸ்டைலிஷ் ஆக்டர் அல்லு அர்ஜூன் பர்த்டே டுடே!

சென்னையில் பிறந்த ஸ்டைலிஷ் ஆக்டர் அல்லு அர்ஜூன் பர்த்டே டுடே!

382
0
HBD Allu Arjun

Allu Arjun Birthday Today; சென்னையில் பிறந்த நடிகர் அல்லு அர்ஜூன் இன்று தனது 38ஆவது பிறந்தநாளை கொண்டாடுகிறார். பிரபலங்கள் பலரும் அவருக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

அல்லு அர்ஜூன் 38ஆவது பிறந்தநாள் (Happy Birthday Allu Arjun) இன்று.

சென்னையில் பிறந்தவர் நடிகர் அல்லு அர்ஜூன். கடந்த 1982 ஆம் ஆண்டு ஏப்ரல் 8 ஆம் தேதி பிறந்தார்.

என்னதான் சென்னையில் பிறந்திருந்தாலும், இவர் தெலுங்கு படங்களில் மட்டுமே அதிகளவில் நடித்துள்ளார். அதோடு, ஹைதராபாத்தைச் சேர்ந்த சினேகா ரெட்டி என்பவரை திருமண்ம செய்தார்.

இவர்களுக்கு அல்லு அயான் என்ற ஒரு மகனும், அல்லு ஆர்ஹா என்ற ஒரு மகளும் இருக்கின்றனர்.

இதுவரை நேரடியாக எந்த தமிழ் படத்திலும் அல்லு அர்ஜூன் நடிக்கவில்லை. மாறாக இவரது நடிப்பில் வந்த ஒரு சில படங்கள் தமிழில் டப் செய்யப்பட்டு வெளியிடப்பட்டது.

அதில், அனுஷ்காவின் ருத்ரமாதேவி படமும் ஒன்று. இந்த படத்தைத் தவிர ஏவடு, பத்ரிநாத், அல வைகுந்தபுரம்லூ ஆகிய படங்களும் தமிழில் வெளியாகியுள்ளதாக கூறப்படுகிறது.

அல்லு அர்ஜூனுக்கு சிறந்த படமாக ஆர்யா, வேதம், ருத்ரமாதேவி, ஜூலாயி, சன் ஆப் சத்யமூர்த்தி, சர்ரைநோடு, ரேஸ் குர்ராம் ஆகிய படங்கள் அமைந்துள்ளது. இந்த படங்கள், அல்லு அர்ஜூனின் கதாபாத்திரங்களை அடுத்த கட்டத்திற்கு கொண்டு சென்றது.

இப்படி சொல்லிக் கொண்டே போகலாம். இந்த நிலையில், அல்லு அர்ஜூனின் 38ஆவது பிறந்தநாளை முன்னிட்டு அவரது நடிப்பில் உருவாகி வரும் புதிய படத்தின் டைட்டில் மற்றும் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியிடப்பட்டுள்ளது.

அதன்படி, படத்திற்கு புஷ்பா என்று டைட்டில் வைக்கப்பட்டுள்ளது. இயக்குநர் சுகுமார் இந்தப் படத்தை இயக்கி வருகிறார். புஷ்பா படத்தில்,அல்லு அர்ஜூன் உடன் இணைந்து விஜய் சேதுபதி, ராஷ்மிகா மந்தனா, ஜகபதி பாபு, பிரகாஷ் ராஜ் ஆகியோர் நடிக்கின்றனர்.

புஷ்பா படம் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் மற்றும் ஹிந்தி ஆகிய 5 மொழிகளில் ஒரே நேரத்தில் வெளியாக இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் அல்லு அர்ஜூன் இன்று தனது 38 ஆவது பிறந்தநாளை கொண்டாடுகிறார். அவருக்கு சினிமா பிரபலங்கள் பலரும் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

அவர்களுடன் இணைந்து மிஸ்டர் புயல் நியூஸ் வெப்சைட் சார்பில் நாமும் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துக் கொள்வோம். ஹேப்பி பர்த்டே அல்லு அர்ஜூன் சார்…

SOURCER SIVAKUMAR
Previous articleஹைட்ரோக்ஸிகுளோரோகுயின் கொரோனாவை குணப்படுத்துமா? பிரதமர் மோடியை மிரட்டி டிரம்ப் கேட்க காரணம் என்ன?
Next articleபிருத்விராஜின் வருகைக்காக ஏங்கித் தவிக்கும் மனைவியின் உருக்கமான பதிவு!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here