Home சினிமா இந்திய சினிமா தெலுங்கில் ரீமேக்: தனுஷின் அசுரன், சேதுபதியின் 96

தெலுங்கில் ரீமேக்: தனுஷின் அசுரன், சேதுபதியின் 96

420
0

தெலுங்கில் ரீமேக்: தனுஷின் அசுரன், விஜய் சேதுபதியின் 96 ஆகிய படங்கள் தெலுங்கில் ரீமேக் ஆக உள்ளது.

ரீமேக் திரைப்படங்கள்

ஒரு மொழியில் வெற்றி பெற்ற படங்கள் பல்வேறு மொழிகளில் ரீமேக் செய்வது மற்றும் அதனை தழுவி அந்த மண்ணுக்கு ஏற்றவாறு திரைப்படங்கள் எடுப்பது வழக்கம்.

அந்த வகையில் தமிழில் வெளிவந்து மெகா ஹிட் ஆனா திரைப்படங்கள் 96 மற்றும் அசுரன் தற்பொழுது தெலுங்கில் தயாராகி வருகிறது.

சமீபத்தில் விஜய்யின் “காவலன்” அஜித்தின் “வீரம்”, காக்க காக்க, நாடோடிகள் என ஏராளமான படங்களை தெலுங்கிலும் மற்ற மொழிகளிலும் ரீமேக் செய்து வெளியிட்டனர்.

96 தெலுங்கில் ஜானு

கடந்த 2018 ஆம் ஆண்டு திரிஷா விஜய் சேதுபதி நடிப்பில் வெளிவந்து ரசிகர்கள் மத்தியில் அதுவும் இளசுகள் மத்தியில் நீங்கா இடம்பெற்ற திரைப்படம்.

இதனை தெலுங்கில் “ஜானு” எனப் பெயர் மற்றம் செய்யப்பட்டு தற்பொழுது  தயாராகி வருகிறது. திரிஷாவிற்கு பதில் சமந்தா மற்றும் விஜய் சேதுபதிக்கு பதில் சர்வானந்தும் நடிக்கின்றனர்.

இந்த படத்தையும் இயக்குனர் பிரேம்குமார் தான் இயக்குகிறார். இந்த படத்தின் முதல் லுக் மற்றும் ட்ரைலர் வெளியாகி கொண்டாடப்பட்டு வருகிறது.

அசுரன் தெலுங்கில் நரப்பா

2019-ஆம் ஆண்டு வெளிவந்து வசூலில் நூறுகோடிக்கு மேலும், திரை அரங்குகளில் நூறு நாட்களுக்கு மேலும் ஓடி சாதனை புரிந்த அசுரன் தற்பொழுது தெலுங்கில் தயாராகிறது.

தமிழில் தனுஷ் நடித்த கதாபாத்திரத்தில் தெலுங்கில் வெங்கடேஷ் நடிக்கிறார். தனுஷ் முதிர்ந்த நடிப்பு தமிழ் ரசிகர்கள் இடையில் வெகுவாக பாராட்டை பெற்றது.

இதனை அப்படியே தெலுங்கில் தக்க வைத்துக்கொள்ள நடிகர் வெங்கடேஷ் தெலுங்கில் மிகவும் மெனக்கெடுகிறார்.

மஞ்சு வாரியாருக்கு பதில் பிரியா மணி அல்லது ஸ்ரேயா தேர்வு செய்ய இருக்கிறார்கள். தமிழில் வந்த அசுரனுக்கு தெலுங்கில் “நரப்பா” என பெயர் வைத்து இருக்கிறார்கள். தெலுங்கு முதல் தோற்றம் வெங்கடேஷ்க்கு வெகுவாக பாராட்டை பெற்று தந்தது.

ஸ்ரீகாந்த் அடல்லா இயக்குகிறார். இதற்கு முன் தெலுங்கில் ப்ரமோட்ஷவம் திரைப்படத்தை இயக்கியவர். இவர் பாடல் ஆசிரியராகவும் பணியாற்றி இருக்கிறார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here