Home சினிமா கோலிவுட் டிஆர்பியில் முதலிடம் பிடித்த தளபதி விஜய்யின் பைரவா!

டிஆர்பியில் முதலிடம் பிடித்த தளபதி விஜய்யின் பைரவா!

0
362
Thalapathy Vijay Bairavaa

Bairavaa TRP; டிஆர்பியில் முதலிடம் பிடித்த தளபதி விஜய்யின் பைரவா! தளபதி விஜய் நடிப்பில் வந்த பைரவா படம் டிஆர்பியில் முதலிடம் பிடித்துள்ளது.

சன் டிவியில் ஒளிபரப்பு செய்யப்பட்ட பைரவா டிஆர்பியில் முதலிடம் பிடித்துள்ளது.

இயக்குநர் பரதன் இயக்கத்தில் தளபதி விஜய், கீர்த்தி சுரேஷ் ஆகியோரது நடிப்பில் கடந்த 2017 ஆம் ஆண்டு ஜனவரி 12 ஆம் தேதி பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திரைக்கு வந்த படம் பைரவா.

கல்வி முறையை மையப்படுத்திய இந்தப் படம் ரசிகர்களிடையே ஓரளவு வரவேற்பு பெற்றது. இந்த நிலையில், பைரவா படம் எத்தனையோ முறை சன் டிவியில் ஒளிபரப்பு செய்யப்பட்டுள்ளது.

இந்த நிலையில், லாக்டவுன் காரணமாக கடந்த வாரம் பைரவா சன் டிவியில் ஒளிபரப்பு செய்யப்பட்டுள்ளது.

கடந்த 4 ஆம் தேதி முதல் 10 ஆம் தேதி வரையில் பைரவா தொடர்ந்து டிஆர்பியில் முதலிடம் பிடித்துள்ளது. ஆம், 15348 (ரூ.1.53 கோடி) வரையில் பதிவுகள் செய்யப்பட்டுள்ளது.

பைரவா படத்தைத் தொடர்ந்து ஜெயம் ரவியின் தனி ஒருவன் 2 ஆவது இடத்திலும் விஜய்யின் புலி 3ஆவது இடத்திலும் உள்ளது.

பைரவா படம் உள்பட விஜய்யின் 4 படங்கள் ரூ.1 கோடி மற்றும் அதிக பதிவுகளை கொடுத்து புதிய சாதனை படைத்துள்ளது.

தற்போது விஜய் மாஸ்டர் படத்தில் நடித்து முடித்துள்ளார். கொரோனா காரணமாக மாஸ்டர் படம் இதுவரையில் திரைக்கு வரவில்லை.

கொரோனா லாக்டவுன் முடிந்து திரையரங்குகள் திறக்கப்பட்டதும் மாஸ்டர் திரைக்கு வரும் என்று தயாரிப்பாளர் சேவியர் பிரிட்டோ அண்மையில் கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Bairavaa TRP

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here