Home சினிமா கோலிவுட் தீப்பெட்டி கணேசனுக்கு உதவி செய்த பிக் பாஸ் சினேகன்!

தீப்பெட்டி கணேசனுக்கு உதவி செய்த பிக் பாஸ் சினேகன்!

475
0
Theepetti Ganesan

Theepetti Ganesan; தீப்பெட்டி கணேசனுக்கு உதவி செய்த பிக் பாஸ் சினேகன்! தனக்கு உதவி செய்யுமாறு கடந்த சில தினங்களுக்கு முன்பு வீடியோ வெளியிட்ட ரேணிகுண்டா புகழ் தீப்பெட்டி கணேசனை பிக் பாஸ் சினேகன் சந்தித்து பேசியுள்ளார்.

தீப்பெட்டி கணேசனுக்கு பிக் பாஸ் புகழ் சினேகன் உதவி செய்துள்ளார்.

ரேணிகுண்டா படத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகர் தீப்பெட்டி கணேசன். இப்படத்தைத் தொடர்ந்து, தென்மேற்கு பருவக்காற்று, ஆயுத போராட்டம், பில்லா 2, முத்து நகரம், என்றென்றும் ஆகிய படங்களில் நடித்துள்ளார்.

தற்போது இவரது நடிப்பில் உருவாகியுள்ள வேட்டை மன்னன் என்ற படம் ரிலீஸுக்கு தயாராகியுள்ளது.

இந்த நிலையில், கடந்த சில தினங்களுக்கு முன்பு தீப்பெட்டி கணேசன் ஒரு வீடியோவை வெளியிட்டார். அதில், சினிமா பட வாய்ப்பு குறைந்துள்ளது.

தனது குடும்பத்தை காப்பாற்ற முடியாமல் கஷ்ப்படுகிறேன். குழந்தைக்கு பால் வாங்க கூட காசு இல்லை. இது அஜித் சாருக்கு தெரியவந்தால் கண்டிப்பாக உதவி செய்வார் என்று கண்ணீர் விட்டு கதறி அழுதுள்ளார்.

இதையடுத்து, பிக் பாஸ் பிரபலம் பாடலாசிரியரான சினேகன் தீப்பெட்டி கணேசனை நேரில் சென்று சந்தித்து பேசியுள்ளார். மேலும், சினேகம் செயலகம் அறக்கட்டளை சார்பில் தீப்பெட்டி கணேசன் குடும்பத்திற்கு 2 வாரத்திற்கு தேவையான உணவுப் பொருட்களை வழங்கியுள்ளார்.

அதோடு, இந்த ஆண்டு குழந்தைகளின் படிப்புச் செலவையும் ஏற்றுக்கொண்டுள்ளார். இதே போன்று கஷ்டப்படும் நடிகர்களுக்கு உதவ பலரும் முன்வர வேண்டும் என்று அவர் கூறியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here