Samyuktha Hegde Dance Video; அரைகுறை ஆடையுடன் ஆட்டம் போட்ட கோமாளி பட நடிகை! சம்யுக்தா ஹெக்டே அரைகுறை ஆடையுடன் ஆட்டம் போட்ட வீடியோ ஒன்றை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
ஜிவி பிரகாஷ் நடிப்பில் வந்த வாட்ச்மேன் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் பெங்களூர் நடிகை சம்யுக்தா ஹெக்டே.
உளவியல் மற்றும் பத்திரிக்கை துறை பிரிவில் இளங்கலை பயின்று வந்த சம்யுக்தா படிப்பை பாதியிலேயே நிறுத்திவிட்டு டான்ஸ் மற்றும் நடிப்பு பற்றி படிக்க தொடங்கிவிட்டார்.
கன்னடத்தில் ஒளிபரப்பான பிக் பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியின் மூலம் ரசிகர்களிடையே பிரபலமான சம்யுக்தாவிற்கு தமிழில் நடிக்கும் வாய்ப்பு வந்தது.
வாட்ச்மேன் படத்தைத் தொடர்ந்து ஜெயம் ரவி நடிப்பில் வந்த கோமாளி படத்தில் நடித்தார். இப்படத்தில், ஜெயம் ரவியின் பள்ளிப்பருவ காதலியாக நடித்திருந்தார்.
இப்படத்திற்கு கிடைத்த வரவேற்பைத் தொடர்ந்து பப்பி என்ற படத்தில் ஹீரோயினாக நடித்தார். இயக்குநர் ஹரிகுமார் இயக்கத்தில் தேள் என்ற படத்தில் நடித்துள்ளார். இதில், பிரபு தேவா முன்னணி ரோலில் நடிக்கிறார்.
இந்த நிலையில், உலகமே கொரோனா அச்சத்தில் இருக்கிறது. நாளுக்கு நாள் கொரோனா வைரஸ் பாதிப்பு இந்தியாவில் தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது.
இதன் விளைவாக, நாடு முழுவதும் வரும் ஏப்ரல் 14 ஆம் தேதி வரையில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
ஊரடங்கு உத்தரவை ஏற்று சினிமா பிரபலங்கள், அரசியல் தலைவர்கள், அப்பாவி ஜனங்கள் என்று அனைவருமே வீட்டிற்குள்ளேயே முடங்கியிருக்கும் நிலை வந்துவிட்டது.
தினந்தோறும் பிஸியாக இருந்த பிரபலங்களால் தற்போது 24 மணி நேரத்தைக் கூட எளிதில் கடக்க முடியவில்லை எனும் போது கொஞ்சம் வருத்தமாக இருக்கிறது.
இதுவரை கிச்சன் பக்கமே சென்றிருக்காத பிரபலங்கள் தற்போது கிச்சனில் அலப்பறையை கூட்டி வருகின்றனர்.
பொழுதுபோகாமல் பிரபலங்கள் செய்யும் அட்டகாசம், லூட்டி ஆகியவற்றிற்கு அளவே இல்லாமல் போய்விட்டது.
அந்தவகையில், கோமாளி பட நடிகை சம்யுக்தா ஹெக்டே தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அரைகுறை ஆடையுடன் ஆட்டம் போடும் வீடியோ ஒன்றை பதிவிட்டுள்ளார்.
ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு 2 நாட்கள் ஆன நிலையில், நேற்று, மியூசிக் மற்றும் டான்ஸ் இரண்டுமே என்னை குணமாக்குகிறது. மேலும், ஒவ்வொரு நாளும் என்னை நன்றாக உணரவைக்கிறது. வாழ்க்கையை எளிதாக்கியதற்கு நன்றி.
டான்ஸ் ஆடும் வீடியோவை கேட்டுக்கொண்டிருக்கும் எனது நண்பர்கள் மற்றும் ரசிகர்களுக்கு இந்த சிறிய டான்ஸ் மூவ்மெண்ட் இதோ…இது எனக்கு பிடித்த பாடலில் இருந்து ஃப்ரீஸ்டைல் செசன் என்று பதிவிட்டுள்ளார்.
தற்போது அந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.