Home சினிமா கோலிவுட் கடவுள் சோதிக்கிறான்: அனைவரும் பாஸாக வேண்டும்: வடிவேலு வீடியோ!

கடவுள் சோதிக்கிறான்: அனைவரும் பாஸாக வேண்டும்: வடிவேலு வீடியோ!

285
0
Vadivelu

Vadivelu Lathi Charge; கடவுள் சோதிக்கிறான்: அனைவரும் பாஸாக வேண்டும்: வடிவேலு வீடியோ! கடவுள் அனைவரையும் சோதிப்பதாகவும், இந்த சோதனையில், பாஸ் ஆக வேண்டும் என்றும் வடிவேலு கூறியுள்ளார்.

கொரோனா வைரஸ் குறித்தும், போலீசாரின் தடியடி குறித்தும் வடிவேலு அடுத்த வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

கொரொனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. தமிழகத்தில் மட்டும் 2000 அதிகமானோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

கடந்த 14 ஆம் தேதி அமல்படுத்தப்பட்ட ஊரடங்கு உத்தரவு கொரோனா தாக்கம் காரணமாக வரும் மே 3 ஆம் தேதி வரையில் நீட்டிக்கப்பட்டுள்ளது.

இந்த ஊரடங்கு உத்தரவு மேலும் நீட்டிக்கப்பட வாய்ப்பிருப்பதாக கூறப்படுகிறது. கொரோனா குறித்து பிரபலங்கள் பலரும் தொடர்ந்து விழிப்புணர்வு வீடியோ வெளியிட்டு வருகின்றனர்.

அந்த வகையில், காமெடி நடிகர் வடிவேலு புதிதாக வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், என்னமோ நடக்கிறது. கடவுள் இறங்கிவிட்டார்.

கடவுள் எல்லாரையும் சோதிக்கிறார். இந்தச் சோதனையில் அனைவரும் பாஸ் ஆக வேண்டும். கொஞ்சம் வேதனையாகத்தான் இருக்கிறது.

இந்த சோதனை மூலமாக நமக்கு பரீட்சை வைத்திருக்கிறான். அந்த பரீட்சையில்,  ஒட்டுமொத்த மனித இனமும் ஒன்று சேர வேண்டும். போலீஸ் யாரையும் வேண்டுமென்றே அடிப்பதில்லை.

சரியான காரணத்தைச் சொன்னால் வெளியே விடுகிறார்கள். அவர்கள் நமக்காக உயிரைப் பணயம் வைத்து சாலைகளில் நின்றுகொண்டு உதவி செய்கிறார்கள்.

கலவரம் நடந்தால்தான் லத்தி சார்ஜ் பண்ணனும். ஆனால் இப்போது உயிரைக் காப்பாற்றுவதற்கு லத்திசார்ஜ் செய்ய வேண்டிய நிலை வந்துவிட்டது. பாதுகாப்பாக இருங்கள். கடவுளிடம் பிரார்த்தனை செய்யுங்கள் எனக் கூறியுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here