Home சினிமா கோலிவுட் அப்பாவான ஜிவி பிரகாஷ்: தாயும் சேயும் நலம்!

அப்பாவான ஜிவி பிரகாஷ்: தாயும் சேயும் நலம்!

422
1
GV Prakash Blessed With Girl Baby

GV Prakash; அப்பாவான ஜிவி பிரகாஷ்: தாயும் சேயும் நலம்! ஜிவி பிரகாஷ், பாடகி சைந்தவி தம்பதியினருக்கு அழகான பெண் குழந்தை பிறந்துள்ளது. தாயும், சேயும் நலமுடன் இருப்பதாக ஜிவி பிரகாஷ் தெரிவித்துள்ளார்.

ஜிவி பிரகாஷ் – சைந்தவி தம்பதியினருக்கு அழகான பெண் குழந்தை பிறந்துள்ளது.

தமிழ் சினிமாவில் முன்னணி இசையமைப்பாளர்களில் ஒருவராக இருப்பவர் ஜிவி பிரகாஷ். நடிகராகவும், தயாரிப்பாளராகவும், பின்னணி பாடகராகவும் வலம் வருகிறார்.

கடந்த 2013 ஆம் ஆண்டு பின்னணி பாடகியான சைந்தவியை காதலித்து திருமணம் செய்து கொண்டார். ஜிவி இசையில் சைந்தவி பல பாடல்களை பாடியிருக்கிறார்.

இந்த நிலையில், ஜிவி பிரகாஷ் சைந்தவி தம்பதியினருக்கு நேற்று அழகான பெண் குழந்தை பிறந்துள்ளது. தாயும், சேயும் நலமாக இருப்பதாக ஜிவி தெரிவித்துள்ளார்.

பெண் குழந்தை பிறந்த சந்தோஷத்தில் இருக்கும் ஜிவி பிரகாஷூக்கு சினிமா பிரபலங்கள், ரசிகர்கள், நண்பர்கள் என்று பலரும் டுவிட்டர் மூலகாம வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

மேலும், ஜிவி பிரகாஷ் இசையமைத்துள்ள சூர்யாவின் சூரரைப் போற்று படத்தின் வெய்யோன் சில்லி பாடல் நேற்று 10 மில்லியன் வியூஸ் பெற்றுள்ளது.

இதற்கு முன்னதாக வந்த சூரரைப் போற்று மேக்கிங் வீடியோவும் 2 நாட்களில் 1 மில்லியன் வியூஸ் பெற்று சாதனை படைத்தது.

தற்போது ஜிவி பிரகாஷ் நடிப்பில் ஐங்கரன், 4ஜி, ஜெயில், ஆயிரம் ஜென்மங்கள், பேச்சிலர், காதலிக்க யாருமில்லை, காதலை தேடி நித்யா நந்தா, அடங்காதே ஆகிய படங்களில் நடித்து வருகிறார்.

SOURCER SIVAKUMAR
Previous articleஅம்மில அரச்சு ரசம் வைக்கும் இயக்குநர் சீனு ராமசாமி: வைரலாகும் வீடியோ!
Next articleமீரா மிதுன் கவர்ச்சி போட்டோஷூட்: வைரலாகும் புகைப்படம்!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here