Harish Kalyan; பிக் பாஸ் பிரபலம் ஹரிஷ் கல்யாண் பர்த்டே டுடே! நடிகர் ஹரிஷ் கல்யாண் இன்று தனது 30ஆவது பிறந்தநாளை கொண்டாடுகிறார். அவருக்கு சினிமா பிரபலங்கள் பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
ஹரிஷ் கல்யாண் பிறந்தநாள் இன்று.
தமிழ் சினிமாவில், வளர்ந்து வரும் நடிகர்களில் ஒருவராக இருப்பவர் நடிகர் ஹரிஷ் கல்யாண். பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூலம் பிரபலமானார். இந்நிகழ்ச்சியிலிருந்து வெளியில் வந்த ஹரிஷ் கல்யாண் தொடர்ந்து பல படங்களில் நடித்து வருகிறார்.
பிக் பாஸ் விட்டு வெளியில், வந்த பிறகு ஹரிஷ் கல்யாண் நடிப்பில் வந்த படம் பியார் பிரேமா காதல். இந்தப் படத்தில் பிக் பாஸ் பிரபலம் ரைசா வில்சன் ஹீரோயினாக நடித்திருந்தார். காதலை மையப்படுத்தி உருவாக்கப்பட்ட இந்தப் படம் இளம் பருவத்தினரை வெகுவாகவே கவர்ந்தது.
இப்படத்தைத் தொடர்ந்து, இஸ்பேட் ராஜாவும் இதய ராணியும் என்ற மற்றொரு காதல் படத்தில் நடித்தார். இந்தப் படத்தில் ஹரிஷ் கல்யாணுக்கு ஜோடியாக ஷில்பா மஞ்சுநாத் நடித்திருந்தார்.
இவர்களது கெமிஸ்டரி படம் முழுவதும் பார்வையாளர்களை வைத்த கண் வாங்காமல் பார்க்க வைத்தது. அந்தளவிற்கு அவர்களது நடிப்பும், காதலும் இருந்தது.
தொடர்ந்து தாராள பிரபு நடித்தார். இந்த 3 படங்களுக்குமே ரசிகர்கள் நல்ல வரவேற்பு கொடுத்தனர். தற்போது, கசட தபற, பெல்லி சூப்புலு என்ற தெலுங்கு படத்தின் தமிழ் ரீமேக்கிலும் நடித்து வருகிறார்.
இந்த நிலையில், நடிகர் ஹரிஷ் கல்யாண் இன்று தனது 30ஆவது பிறந்தநாளை சிறப்பாக கொண்டாடுகிறார்.
ஹரிஷ் கல்யாண் பிறந்தநாளை முன்னிட்டு சினிமா பிரபலங்கள், ரசிகர்கள் என்று பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். இதன் காரணமாக, ஹலோவில், HBDHarishKalyan என்ற ஹேஷ்டேக் டிரெண்டாகி வருகிறது.