Naan Sirithal Break Up Song; ஒரு சாதாரண படத்திற்கு இப்படியொரு வரவேற்பா? பிரேக்கப் சாங் 10 மில்லியன் வியூஸ் ரீச்! ஹிப் ஹாப் ஆதி நடிப்பில் வந்த நான் சிரித்தால் படத்தில் உள்ள பிரேக்கப் சாங் யூடியூப்பில் 10 மில்லியன் வியூஸ் பெற்றுள்ளது.
பிரேக்கப் சாங் யூடியூப்பில் 10 மில்லியன் வியூஸ் பெற்றுள்ளது.
இயக்குநர் ராணா இயக்கத்தில் ஹிப் ஹாப் தமிழா ஆதி, ஐஸ்வர்யா மேனன், கே எஸ் ரவிக்குமார், ரவி மரியா, ஷா ரா ஆகியோர் பலர் நடிப்பில் கடந்த பிப்ரவரி 14 ஆம் தேதி திரைக்கு வந்த படம் நான் சிரித்தால்.
இப்படத்திற்கு ஹிப் ஹாப் தமிழா ஆதிதான் இசையமைத்திருந்தார். இன்ஜினியரிங் படிப்பில் அரியர்ஸ் வைத்திருந்தாலும் ஐடி நிறுவனத்தில் வேலை பார்க்கிறார்.
அதே அலுவலகத்தில் வேலை பார்க்கும் ஐஸ்வர்யா மேனனை காதலிக்கிறார். ஒரு கட்டத்தில் பாஸிடம் கேள்வி கேட்ட மாட்டிக்கொண்ட ஆதியை அரியர்ஸ் கிளியர் செய்துவிட்டால் வேலை என்ற கட்டாயத்திற்கு வருகிறார்.
அதன் பிறகு தேர்வு எழுத செல்கிறார். அங்கு அவருக்கு சிரிக்கும் பழக்கும் ஏற்படுகிறது. குழப்பத்தில் இருக்கும் கே எஸ் ரவிக்குமார் ஆதி தான் தன்னை கொல்ல வருவதாக நினைக்க சிறைக்கும் செல்கிறார்.
சிறையிலிருந்து தப்பித்து வரும் கே எஸ் ரவிக்குமார் ஆதியை கொலை செய்ய திட்டம் போடுகிறார். அவரிடமிருந்து ஆதி தப்பித்தாரா? இல்லை வேலை நீக்கத்திலிருந்து தப்பித்து காதலியை கரம் பிடித்தாரா என்பது தான் படத்தின் மீதிக் கதை.
தொடர்ந்து ஹீரோவாக நடித்து வந்த ஆதிக்கு இந்தப் படம் கை கொடுக்கும் என்று நினைத்துள்ளார். ஆனால், அப்படி ஒன்றும் வரவேற்பு பெறவில்லை.
ஆனால், படம் ஹிட் இல்லையென்றாலும் படத்தில் இடம்பெற்ற பிரேக்கப் சாங் யூடியூப்பில் 10 மில்லியன் வியூஸ் பெற்று சாதித்துள்ளது.
அதுவும் குறைவான நாட்களில் இப்படியொரு மைல்கல்லை எட்டியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
இதன் காரணமாக BreakUpSong10MViews என்ற ஹேஷ்டேக் ஹலோவில் டிரெண்டாகி வருகிறது.
Hiphop Tamizha Aadhi Break Up Song Hits 10 Million Views in Youtube From Naan Sirithal Movie