Thala Ajith; பிருத்விராஜின் தங்கையை அஜித் டார்ச்சர் செய்தாரா? அய்யோ இப்படி பழி போடாதீங்க? நடிகர் பிருத்விராஜின் தங்கையை அஜித் டார்ச்சர் செய்ததாக ஒரு வீடியோ வெளியாகி வருகிறது.
அஜித், நடிகர் பிருத்விராஜின் சகோதரியை டார்ச்சர் செய்ததாக ஒரு வீடியோ வெளியாகி வருகிறது.
தமிழ் சினிமாவின் உச்சநட்சத்திரம் தல அஜித். தன்னம்பிக்கை ஒன்றை மட்டுமே வைத்து தனது சொந்த முயற்சியில் சினிமாவில் ஆதிக்கம் செலுத்தி வருகிறார்.
உலகம் முழுவதும் ரசிகர்கள் பட்டாளங்களை கொண்டுள்ளார். அஜித்திற்கு மட்டுமலல், அவரது மகன் ஆத்விக், மகள் அனோஷ்கா மற்றும் ஷாலினி ஆகியோருக்கு என்று ஏராளமான ரசிகர்கள் இருக்கிறார்கள்.
அஜித் அவர் உண்டு, அவரது வேலை உண்டு என்று இருப்பவர். யாருடைய விஷயத்திலும் தேவையில்லாமல் தலையிடவும் மாட்டார். படத்தில் நடிப்பதோடு சரி.
பட புரோமோஷன் நிகழ்ச்சி, இசை வெளியீட்டு விழா என்று எதிலும் கலந்து கொள்ளவும் மாட்டார்.
ஆனால், எப்போதும் பெண்களுக்கு மதிப்பும், மரியாதையும் கொடுப்பவர். தான் நடித்த பெண்களை மையப்படுத்திய நேர்கொண்ட பார்வை படத்தில் கூட பெண்கள் நோ சொன்னால் நோ தான்.
அதன் பிறகு அவர்களை எந்த தொந்தரவும் செய்யக்கூடாது என்ற ஆழமான கருத்தை முன் வைத்தார்.
இப்படத்திற்கு உலகம் முழுவதிலும் இருந்து வரவேற்பும், விமர்சனமும் வந்தது. அதோடு, பாக்ஸ் ஆபிஸ் வசூலிலும் நல்ல வரவேற்பு கிடைத்தது.
இந்த நிலையில், அஜித் பள்ளியில் நடித்துக் கொண்டிருந்த போது நடிகர் பிருத்விராஜின் தங்கையை டார்ச்சர் செய்ததாகவும் அதனால், தான் அவர் பள்ளிப்படிப்பை நிறுத்தியதாகவும் ஒரு வீடியோ வெளியாகி வைரல் ஆகி வருகிறது.
உண்மையில், நடிகர் பிருத்விராஜின் தங்கையை டார்ச்சர் செய்தது அஜித் அல்ல. அது அஜித் மேனன். பிருத்விராஜின் தங்கைக்கு அஜித் எப்போதுமே பாதுகாப்பாகவே இருந்துள்ளாராம்.
அவர் இப்படி சொன்னதை கட் செய்து தவறான கோணத்தில் பார்க்கும் படியான வீடியோவை வெளியிட்டு வைரலாக்கி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.