Home சினிமா கோலிவுட் Vijay IT Raid: விஜய், அன்புச் செழியன் ஆவணங்கள் ஒப்படைப்பு!

Vijay IT Raid: விஜய், அன்புச் செழியன் ஆவணங்கள் ஒப்படைப்பு!

408
0
Vijay IT Raid விஜய் வீட்டில் ஐடி ரெய்டு

Vijay IT Raid: விஜய், அன்புச் செழியன் ஆகியோரிடம் கைப்பற்றப்பட்ட ஆவணங்கள் அனைத்தையும் அமலாக்கத்துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டு உள்ளது.

விஜய்,  அன்புச்செழியன், ஏஜிஎஸ் நிறுவனம் என்று பல இடங்களில் வருமான வரித்துறையினர் நடத்திய சோதனையின் போது கைப்பற்றப்பட்ட ஆவணங்கள் அமலாக்கத்துறையிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

விஜய் நடிப்பில் கடந்த ஆண்டு தீபாவளிக்கு வெளியான படம் பிகில். ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்ற இப்படம் ரூ.300 கோடிக்கு அதிகமாக வசூல் குவித்தது.

Vijay IT Raid வருமான வரி சோதனை

இந்த நிலையில், பிகில் திரைப்படத்தின் வரவு, செலவு கணக்கில் வரி ஏய்ப்பு நடந்திருப்பதாக வருமான வரித்துறையினருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் விஜய், பைனான்சியர் அன்புச் செழியன் மற்றும் ஏஜிஎஸ் நிறுவனத்திற்கு சொந்தமான அலுவலகம் மற்றும் வீடு ஆகிய இடங்களில் வருமான வரித்துறையினர் அதிரடியாக சோதனை மேற்கொண்டனர்.

இந்த சோதனையின் முடிவில் கணக்கில் வராத ரூ.77 கோடி ரொக்கப் பணம், தேதி குறிப்பிடாத காசோலைகள் என்று பல்வேறு ஆவணங்களை வருமான வரித்துறையினர் பறிமுதல் செய்துள்ளனர்.

இதையடுத்து, விஜய், ஏஜிஎஸ் நிறுவனம் மற்றும் அன்புச்செழியன் ஆகியோரிடம் விசாரணை நடத்துவதற்கு அவர்களுக்கு சம்மன் அனுப்பப்பட்டது. ஆனால், விஜய் விசாரணைக்கு வரவில்லை என்று கூறப்படுகிறது.

இதற்குப் பதிலாக விஜய் மற்றும் அன்புச் செழியனின் ஆடிட்டர்கள் வருமான வரித்துறை அதிகாரிகளை சந்தித்து பறிமுதல் செய்யப்பட்ட ஆவணங்கள் குறித்து விளக்கம் அளித்துள்ளனர்.

இந்த நிலையில், மூவரிடமும் கைப்பற்றப்பட்ட ஆவணங்கள் தற்போது அமலாக்கத்துறையிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

சட்டவிரோதமாக பணப்பரிவர்த்தனை நடந்துள்ளதாக எழுந்த குற்றச்சாட்டைத் தொடர்ந்து, கைப்பற்றப்பட்ட ஆவணங்கள் அமலாக்கத்துறையிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

மாஸ்டர்

பிகில் படத்தைத் தொடர்ந்து விஜய், இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தனது 64 ஆவது படமான மாஸ்டர் படத்தில் பிஸியாக நடித்து வருகிறார். இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார்.

விஜய்யுடன் இணைந்து மாளவிகா மோகனன், விஜய் சேதுபதி, சாந்தனு, அருண் தாஸ், நாசர், தீனா, ஸ்ரீமன், கௌரி கிஷான், ப்ரிகதா சகாயா ஆகியோர் உள்பட பலர் நடித்து வருகின்றனர்.

மாஸ்டர் சிங்கிள் டிராக்

சமீபத்தில் இப்படத்தின் முதல் சிங்கிள் டிராக் குட்டி ஸ்டோரி பாடல் லிரிக் வீடியோ வெளியாகி சமூக வலைதளங்களில் வைரலானது. இதையடுத்து, அடுத்த மாதம் இப்படத்தின் இசை வெளியீட்டு விழா நடக்க இருப்பதாக கூறப்படுகிறது. இதற்காக சென்னையில் அனுமதி கேட்டுள்ளனர்.

மாஸ்டர் இசை வெளியீட்டு விழா

ஆனால், அதற்கு மறுப்பு தெரிவிக்கப்படவே, கோயம்புத்தூரில் மாஸ்டர் படத்தின் இசை வெளியீட்டு விழாவை நடத்த படக்குழுவினர் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. வரும், ஏப்ரல் 9 ஆம் தேதி இப்படம் திரைக்கு வர இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Follow my blog with Bloglovin

Previous articleSex Education Netflix: கட்டாயம் பார்க்க வேண்டிய வெப் சீரிஸ்
Next articleவிஜய்யின் முடிவு என்ன? தளபதி 65 படம் யாருடன்?

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here