Jackie Chan Corona Awareness Video; வலிமையுடன் இருக்க வேண்டும்: ஜாக்கி சான் வேண்டுகோள்! மக்களிடையே பாதுகாப்பு ஏற்படுத்தும் வகையில், கொரோனா விழிப்புணர்வு குறித்து நடிகர் ஜாக்கி சான் வீடியோ வெளியிட்டுள்ளார்.
ஜாக்கி சான் கொரோனா விழிப்புணர்வு குறித்து வீடியோ வெளியிட்டுள்ளார்.
கடந்தாண்டு டிசம்பர் மாதம் சீனாவில் தொடங்கிய கொரோனா வைரஸ் பாதிப்பு 100க்கும் அதிகமான உலக நாடுகளில் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.
தற்போது இந்தியாவிலும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. எனினும், இதுவரை மருந்து கண்டுபிடிக்கப்படாத போதிலும், தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
அந்த வகையில், 21 நாட்களுக்கு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு அனைவருமே வீட்டிற்குள்ளேயே முடங்கியிருக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
கொரோனா பாதிப்பு மக்களுக்கு உதவும் வகையில் பிரதமர் மோடி மற்றும் முதல்வர் நிவாரண நிதிக்கு பலரும் தங்களால் முடிந்த நிதியுதவி அளித்து வருகின்றனர்.
சினிமா பிரபலங்கள், தொழிலதிபர்கள் கோடிக்கணக்கில் நிதியுதவி அளித்துள்ளனர். இந்த நிலையில், ஹாலிவுட் நடிகர் ஹாக்கி சான் தனது டுவிட்டர் பக்கத்தில் கொரோனா விழிப்புணர்வு வீடியோ ஒன்றை பதிவிட்டுள்ளார்.
அதில் அவர் கூறியிருப்பதாவது: அனைவருக்கும் வணக்க்ம் நான் உங்கள் ஜாக்கிசான். இது அனைவருக்கும் கடினமான காலகட்டம்.
அனைவருமே ஒரே பிரச்சனையைத் தான் எதிர்கொண்டிருக்கிறோம். அரசு கூறும் விதிமுறைகளை பின்பற்ற வேண்டும். அதே போன்று அனைவருமே வீட்டிலேயே இருக்க வேண்டும்.
வெளியில் செல்ல வேண்டுமென்றால், முகக் கவசங்களை அணிந்து கொண்டு செல்ல வேண்டும். சுத்தமாக இருக்க வேண்டும்.
நீங்கள், உங்களை பாதுகாத்தால் அது உங்களது குடும்பத்தை பாதுகாப்பது போன்று. பாதுகாப்போடு, வலியாக இருங்கள். பிரகாசமான எதிர்காலம் இருக்கிறது என்று தெரிவித்துள்ளார்.