Home சினிமா கோலிவுட் தோற்றத்தில் விஜய்யைப் போன்று இருக்கும் ஜெய் பர்த்டே டுடே!

தோற்றத்தில் விஜய்யைப் போன்று இருக்கும் ஜெய் பர்த்டே டுடே!

323
0
Jai Birthday Today

Jai Birthday; பகவதி படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமான நடிகர் ஜெய் இன்று தனது 35ஆவது பிறந்தநாளை கொண்டாடுகிறார்.

நடிகர் ஜெய் இன்று தனது பிறந்தநாளை (Jai Birthday) கொண்டாடுகிறார்.

ஜெய் ஒரு இசைக்குடும்பத்தைச் சேர்ந்தவர். இசையமைப்பாளர் தேவா, நடிகர் ஜெயிக்கு மாமா முறை.

தான் யுவன் சங்கர் ராஜாவின் தீவிர ரசிகர் என்று கூறிக் கொள்கிறார்.

தளபதி விஜய் நடிப்பில் வந்த பகவதி என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர். அப்போது அவருக்கு 16 வயது. ஆனால், இந்தப் படத்தில் விஜய்யின் சகோதரனாக குணா என்ற கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.

அதற்கு காரணமாக, ஜெய், விஜய்யைப் போன்று உருவதோற்றத்தில் இருப்பதால், அவருக்கு சகோதரனாக நடிக்க இயக்குநர் வெங்கடேஷ் ஜெய்யை தேர்வு செய்துள்ளார்.

6 டீன்ஸ் என்ற தெலுங்கு படத்தின் ரீமேக்கில் நடிக்க இருந்தார். ஆனால், இந்தப் படம் தொடங்கப்படவில்லை. அதன் பிறகு அலை, தேவதையை கண்டேன் படங்களில் நடிக்க வாய்ப்பு வந்தது.

இசை மீது இருந்த ஆர்வத்தில், இசையமைப்பாளர் தேவாவின் படங்களில், ஸ்ரீகாந்த் தேவா மற்றும் போபோ சஷி ஆகியோருடன் இணைந்து கீபோர்டு வாசிப்பவராக பணியாற்றியுள்ளார்.

ஜெய்யின் நண்பர் யுகேந்திரனின் சிபாரிசின் பேரில் வெங்கட் பிரபு இயக்குநராக அறிமுகமான சென்னை 600028 படத்தின் ஆடிஷனுக்கு சென்றார்.

இந்தப் படத்திற்காக தேர்வு செய்யப்பட்ட 7 பேரில் ஜெய்யும் ஒருவர். அப்படித்தான் இந்தப் படத்தில் கிரிக்கெட் விளையாடும் விளையாட்டு வீரனாக நடித்தார். இப்படத்திற்கு கிடைத்த வரவேற்பு, வெற்றியைத் தொடர்ந்து வெங்கட் பிரபு இயக்கும் ஒவ்வொரு படத்திலும் ஜெய்க்கு வாய்ப்பு வழங்கப்பட்டது.

நடிகர் ஜெய்க்கு எங்கேயும் எப்போதும் மற்றும் ராஜா ராணி ஆகிய படங்களில் நல்ல வரவேற்பும், சூப்பர்ஹிட் படங்களாக அமைந்தது.

அட்லி இயக்கிய ராஜா ராணி படத்தில் நயன்தாராவை காதலிக்கும் ஒரு கதாபாத்திரத்தில் நடித்து, தனது நடிப்புத் திறமையை வெளிப்படுத்தினார்.

எங்கேயும் எப்போதும் படத்தின் மூலம் அஞ்சலி, ஜெய் இருவருக்கும் இடையில் காதல் மலர்ந்ததாக செய்தி வெளியானது. இருவரும் ஒன்றாக வசித்து வந்ததாகவும், விரைவில் திருமணம் செய்து கொள்ள இருப்பதாகவும் கூறப்பட்டது. அஞ்சலி பிறந்தநாளுக்கு ஜெய் வாழ்த்துவதும், ஜெய் பிறந்தநாளுக்கு காதலனுக்கு வாழ்த்து சொல்வதும் போன்று வாழ்த்துவமாக இவர்களது காதல் கதை ஓடியது.

அதன் பிறகு என்ன ஆச்சு என்று தெரியவில்லை. இருவரும் பிரிந்து விட்டதாக தகவல் வந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்ந்து எத்தனையோ படங்களில் நடித்துள்ளார். தற்போது இவரது நடிப்பில், பிரேக்கிங் நியூஸ், எண்ணி துணிக, பார்ட்டி ஆகிய படங்கள் உருவாகி வருகிறது.

இந்த நிலையில், இன்று தனது 35ஆவது பிறந்தநாளை கொண்டாடுகிறார். அவருக்கு சினிமா பிரபலங்கள் பலரும் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

மிஸ்டர் புயல் இணையதளம் சார்பில் நாமும் வாழ்த்து தெரிவித்துக் கொள்வோம். ஹேப்பி பர்த்டே ஜெய் சார்…

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here