Kaithi Lokesh Kanagaraj; இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கடந்தாண்டு வெளியான கைதி படம் அவரது பிறந்தநாளை முன்னிட்டு தற்போது டுவிட்டரில் டிரெண்டாகி வருகிறது.
இயக்குந லோகேஷ் கனகராஜ் இன்று தனது 34 ஆவது பிறந்தநாளை (Lokesh Kanagaraj Birthday) சிறப்பாக கொண்டாடி வருகிறார்.
லோகேஷ் கனகராஜ் (Happy Birthday Lokesh) இயக்கத்தில் கார்த்தி நடிப்பில் கடந்தாண்டு தீபாவளி பண்டிகையை முன்னிட்டு திரைக்கு வந்த படம் கைதி (Kaithi).
முழுக்க முழுக்க ஆக்ஷன் த்ரில்லர் கதையை மையப்படுத்திய இப்படம் முழுவதும் இரவிலே படமாக்கப்பட்டுள்ளது.
அதோடு, படத்திற்கு ஹீரோயினும் இல்லை டூயட்டும் இல்லை. ஆனால், கைதிக்கும், போலீஸுக்கும், போதைப்பொருள் கும்பலுக்கும் இடையில் நடக்கும் சம்பவத்தை மையப்படுத்தி இப்படம் உருவாக்கப்பட்டது.
கைதி படத்திற்கு ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு. விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் நல்ல ரெஸ்பான்ஸ் கிடைத்தது. கிட்டத்தட்ட ரூ.105 கோடி வரையில் வசூல் குவித்ததாக விக்கிப்பீடியா பக்கத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கைதி படத்திற்கு கிடைத்த அமோக வரவேற்பைத் தொடர்ந்து கைதி படத்தின் 2 பாகமும் உருவாக இருப்பதாக அறிவிக்கப்பட்டது. ஆனால், எப்போது என்று தகவல் இல்லை.
தற்போது இயக்குநர் லோகேஷ் கனகராஜ் மாஸ்டர் (Master Lokesh Kanagaraj) படத்தை இயக்கி முடித்துள்ளார். மாஸ்டர் போஸ்டர் புரோடக்ஷன் பணிகள் விறுவிறுப்பாக நடந்து வருகிறது.
வரும் ஏப்ரல் 9 ஆம் தேதி திரைக்கு மாஸ்டர் படத்தின் இசை வெளியீட்டு விழா நாளை மாலை 6.30 மணிக்கு நடக்க இருக்கிறது.
சன் தொலைக்காட்சி மாஸ்டர் இசை வெளியீட்டை நேரலை செய்கிறது. சென்னையில் உள்ள லீலா பேலஸில் மாஸ்டர் இசை வெளியீடு (Master Audio Launch) நடப்பதாக அழைப்பிதழ் வந்துள்ளது.
தொடர்ந்து பிளாக்பஸ்டர் படத்தை கொடுத்து வரும் லோகேஷ் கனகராஜ் விஜய்யைத் தொடர்ந்து ரஜினியை வைத்து ஒரு படம் இருக்க இருக்கிறார். ரஜினி நடிப்பில் உருவாக இருக்கும் தலைவர்169 படத்தை இயக்க இருக்கிறார்.
ரஜினிகாந்த் அண்ணாத்த படத்தில் பிஸியாக இருப்பதால், இப்படத்தின் படப்பிடிப்பு முடிந்த பிறகு தலைவர்169 படத்தின் படப்பிடிப்பு தொடங்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதற்கிடையில், லோகேஷ் கனகராஜ் இன்று தனது 34 ஆவது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார். மாஸ்டர் குழுவினர் கேக் வெட்டி லோகேஷ் கனகராஜின் பிறந்தநாளை சிறப்பித்து வருகின்றனர்.
சினிமா பிரபலங்களும் அவருக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவிக்கும் நிலையில், மிஸ்டர் புயல் இணையதளம் சார்பில் நாமும் வாழ்த்து தெரிவிப்போம்…ஹேப்பி பர்த்டே லோகேஷ் கனகராஜ்…