Home சினிமா கோலிவுட் ஊழலுக்கு எதிராக நீதியை நிலைநாட்டி 24 ஆண்டுகளை கடந்த இந்தியன்!

ஊழலுக்கு எதிராக நீதியை நிலைநாட்டி 24 ஆண்டுகளை கடந்த இந்தியன்!

0
295
Kamal Haasan Indian Movie

Indian Movie; ஊழலுக்கு எதிராக நீதியை நிலைநாட்டி 24 ஆண்டுகளை கடந்த இந்தியன்! கமல் ஹாசன், மனீஷா கொய்ராலா ஆகியோரது நடிப்பில் திரைக்கு வந்த இந்தியன் படம் 24 ஆண்டுகளை கடந்துள்ளது.

இந்தியன் படம் திரைக்கு வந்து 24 ஆண்டுகளை கடந்துள்ளது.

இயக்குநர் ஷங்கர் இயக்கத்தில் கமல் ஹாசன், சுகன்யா, மனீஷா கொய்ராலா, கவுண்டமனி, செந்தில், கஸ்தூரி, நிழல்கள் ரவி ஆகியோரது பலர் நடிப்பில் கடந்த 1996 ஆம் ஆண்டு மே 9 ஆம் தேதி திரைக்கு வந்த படம் இந்தியன்.

அரசு அலுவலங்களில் நடக்கும் ஊழல்களால் பொதுமக்களுக்கு ஏற்படும் பாதிப்புகளையும், அவற்றிற்கு தீர்வு காண புறப்பட்ட வயதான நபரின் இரண்டு தனித்தனி பிளாக்‌ஷ்பேக் தான் இந்தியன்.

மனுநீதி சோழன் எனும் அரசன், தனது மகன் செய்தது தவறு என்று தெரிந்ததும், அவனை தேர்க்காலில் இட்டு கொலை செய்து நீதியை நிலைநாட்டிய கதையை இந்தியன் படத்தில், இயக்குநர் ஷங்கர் அழகாக கையாண்டிருப்பார்.

உலக நாயகன் கமல் ஹாசன் வயதான சேனாதிபதி மற்றும் சந்திர போஸ் எனும் சந்துரு என்ற இரு கதாபாத்திரங்களில் கச்சிதமாக நடித்து அசத்தியிருப்பார்.

வயதான சேனாதிபதிக்கு மனைவியாக வயதான தோற்றத்தில் நடிகை சுகன்யா நடித்து தனது நடிப்பு திறமையை வெளிப்படுத்தியிருப்பார்.

தற்போது இந்தப் படம் வெளியாகி நேற்றுடன் 24 ஆண்டுகளை கடந்துள்ளது. இதனை #24YearsOfEpicIndian என்ற ஹேஷ்டேக் மூலம் ரசிகர்கள் கொண்டாடுகி வருகின்றனர்.

இந்தியன் படத்திற்கு கிடைத்த அமோக வரவேற்பைத் தொடர்ந்து இந்தியன் 2 படம் உருவாகி வருகிறது.

இந்தப் படத்தில் கமல் ஹாசன் உடன் இணைந்து நெடுமுடி வேணு, காஜல் அகர்வால், சித்தார்த், பாபி சிம்ஹா, ரகுல் ப்ரீத் சிங், ப்ரியா பவானி சங்கர், சதீஷ், மனோ பாலா, தம்பி ராமையா, லிவிங்ஸ்டன் ஆகியோர் பலர் நடிக்கின்றனர்.

இப்படத்தின் படப்பிடிப்பின் போது ஏற்பட்ட விபத்து மற்றும் கொரோனா பாதிப்பு காரணமாக படப்பிடிப்பு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here