Home சினிமா கோலிவுட் விதவிதமான போஸ்களில் லோஸ்லியா: வைரலாகும் புகைப்படங்கள்!

விதவிதமான போஸ்களில் லோஸ்லியா: வைரலாகும் புகைப்படங்கள்!

523
0
Bigg Boss Losliya Photoshoot

Losliya; விதவிதமான போஸ்களில் லோஸ்லியா: வைரலாகும் புகைப்படங்கள்! பிக் பாஸ் புகழ் லோஸ்லியா விதவிதமான போஸ்களில் இருக்கும் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

லோஸ்லியாவின் புகைப்படங்கள் Losliya Snaps என்ற டைட்டிலில் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

விஜய் தொலைக்காட்சியில் கமல் ஹாசன் தொகுத்து வழங்கிய பிக் பாஸ் தமிழ் சீசன் 3 நிகழ்ச்சியின் மூலம் உலகம் அறியும் ஒரு பிரபலமாக வலம் வந்தார்.

இந்நிகழ்ச்சி அவருக்கு காதலிக்கும் வாய்ப்பையும் உருவாக்கிக் கொடுத்தது. ஆம் இந்நிகழ்ச்சியில் ஒரு போட்டியாளராக வந்த நடிகர் கவின், லோஸ்லியா இருவரும் காதலித்தனர்.

ஆனால், உண்மையில் அவர்கள் காதலித்தார்களா? என்றால் அது அவர்களுக்கு தான் தெரியும். ஒவ்வொரு நாளும் ஸ்கிரிப்ட்டில் என்ன இருக்கிறதோ அதையே நடிக்க வேண்டும் அது தான் பிக் பாஸ் நிகழ்ச்சி என்று பலரும் விமர்சனம் செய்தனர்.

ஆதலால், அவர்கள் பிக் பாஸ் ஸ்கிரிப்ட்டுக்காக காதலித்தார்கள் என்று கூறப்படுகிறது. இந்நிகழ்ச்சியிலிருந்து வெளியேறிய அவர்கள் காதலிக்கிறார்களா? என்றால் இதற்கு பதில் இல்லை. எனினும், லோஸ்லியாவிற்கு ரசிகர்கள் லோஸ்லியா ஆர்மி உருவாக்கினர்.

அந்தளவிற்கு தனது நடிப்பு, பாடும் திறமை போன்றவற்றால் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தார்.

இந்த நிலையில், தற்போது ஊரடங்கு உத்தரவில் அனைவருமே வீட்டில் இருக்கும் நிலையில், லோஸ்லியாவின் அழகான புகைப்படங்கள் Losliya Snaps என்ற டைட்டிலில் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

இது ஒருபுறம் இருக்க, லோஸ்லியா வீட்டிலிருந்தபடியே பாடல் பாடிய வீடியோவை சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இந்த வீடியோவை லோஸ்லியா ஆர்மியினர் வைரலாக்கி வருகின்றனர்.

பிக் பாஸ் நிகழ்ச்சி மூலம் பிரபலமான லோஸ்லியா ப்ரண்ட்ஷிப் படத்தின் ஹர்பஜன் சிங்கிற்கு ஜோடியாக நடித்துள்ளார். இந்தப் படத்தில் ஆக்‌ஷன் கிங் அர்ஜூனும் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here