Malavika Mohanan; மாஸ்டருக்காக எப்படி தயார் செய்தேன்? மாளவிகா மோகனன் விளக்கம்! தளபதி விஜய் நடித்த மாஸ்டர் படத்திற்காக தான் எப்படியெல்லாம் தயாரானேன் என்பது குறித்து நடிகை மாளவிகா மோகனன் விளக்கம் கொடுத்துள்ளார்.
மாஸ்டர் படத்தில் நடிக்க எப்படியெல்லாம் யார் செய்தேன் என்று நடிகை மாளவிகா மோகனன் தெரிவித்துள்ளார்.
இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தளபதி விஜய், விஜய் சேதுபதி, மாளவிகா மோகனன், ஆண்ட்ரியா, சாந்தனு ஆகியோர் பலரது நடிப்பில் உருவாகியுள்ள படம் மாஸ்டர்.
இளம் இசையமைப்பாளர் அனிருத் இந்தப் படத்திற்கு இசையமைத்துள்ளார். இவரது இசையில் வந்த குட்டி ஸ்டோரி, வாத்தி கம்மிங் ஆகிய பாடல்கள் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்றுள்ளது.
கடந்த ஏப்ரல் 9 ஆம் தேதி வெளியாக இருந்த கொரோனா லாக்டவுன் காரணமாக மாஸ்டர் படத்தின் ரிலீஸ் தேதி தள்ளி வைக்கப்பட்டது. வரும் ஜூன் 22 ஆம் விஜய் பிறந்தநாளுக்கு வெளியாகும் என்று கூறப்பட்டது.
ஆனால், மாஸ்டர் தீபாவளிக்கு வெளிவரும் என்று தகவல் வெளியானது. இந்த நிலையில், மாஸ்டர் படத்தில் தான் எப்படி நடித்தேன் என்பது குறித்து மாளவிகா மோகனன் விளக்கம் கொடுத்துள்ளார்.
இது குறித்து அவர் கூறுகையில், படப்பிடிப்புக்கு ஒரு வாரத்திற்கு முன்னதாகவே இயக்குநர் லோகேஷ் கனகராஜ் தன்னிடம் டயலாக் பேப்பரையும், சீன் குறித்தும் விளக்குவார்.
அந்த ஒரு வாரத்தில் டயலாக் மற்றும் சீன் குறித்து நன்கு அறிந்து கொண்டு படப்பிடிப்பின் போது கச்சிதமாக நடித்துவிட்டு வருவேன் என்று தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
மலையாளம் சினிமாவின் மூலம் திரைக்கு வந்த மாளவிகா மோகனன் Beyond The Clouds என்ற பாலிவுட் படத்தில் நடித்துள்ளார். தொடர்ந்து ரஜினிகாந்த் நடிப்பில் வந்த பேட்ட படத்தில் நடிகர் சசிகுமாருக்கு ஜோடியாக நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.