Meera Mithun Bedroom Dance Video; படுக்கறையில் நின்று ஆண் நண்பருடன் டான்ஸ் ஆடும் மீரா மிதுன்: வைரலாகும் வீடியோ! பிக் பாஸ் புகழ் மீரா மிதுன், படுக்கையறையில் நின்று கொண்டு ஆண் நண்பருடன் டான்ஸ் ஆடிய வீடியோவை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
மீரா மிதுன் தனது படுக்கையறை டான்ஸ் வீடியோவை இன்ஸ்டாகிராம் பக்கத்திக் பகிர்ந்துள்ளார்.
என்னதான் மாடலாக இருந்தாலும் கமல் ஹாசன் தொகுத்து வழங்கிய பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூலம் அதிகளவில் பிரபலமானவர் நடிகை மீரா மிதுன். ஒரு சில படங்களிலும் நடித்துள்ளார்.
எப்போதும் கவர்ச்சி புகைப்படங்கள், வீடியோக்களை வெளியிட்டு வரும் மீரா மிதுனை யாரோ ஒருவர் மோசமாக மாஃபிங் செய்து புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார்.
இது குறித்து அதிர்ச்சியடைந்த மீரா மிதுன், தமிழக முதல்வர் மற்றும் பிரதமருக்கு டேக் செய்து, இது போன்ற பிரச்சனைகளை சந்திப்பவள் நானாகத்தான் இருப்பேன். இதுவரை அரசு தரப்பிலிருந்து எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
இது போன்ற சிலரால் பெண்களின் வாழ்க்கை பாதிக்கப்படுகிறது. இது போன்றவர்களுக்கு பெயிலில் வர முடியாத அளவிற்கு மிகவும் கடுமையான தண்டனைகள் கொடுக்கப்பட வேண்டும்.
பெண்களை ஆபாசமாக சித்தரிப்பவர்களை குண்டர் சட்டத்தில் போட வேண்டும் என்று தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தினார். இதற்கு ரசிகர்கள் ஆதரவு அளித்தனர்.
இந்த நிலையில், அதற்குள்ளாக மீரா மிதுனை விமர்சிக்கும் வகையில் படுக்கையறை வீடியோ ஒன்றை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
ஆம், படுக்கையறையில் கருப்பு நிற உடையில் ஆண் நண்பருடன் டான்ஸ் ஆடும் வீடியோ தான் தற்போது மீரா மிதுனை விமர்சிக்க வைத்துள்ளது.
மேலும், அந்த வீடியோவில், மனம் வலியுடன் இருக்கும் போது அதனை வெளிப்படுத்த எந்த வார்த்தையும் போதுமானதாக இருக்காது என்று குறிப்பிட்டுள்ளார்.
தற்போது இந்த வீடியோ தான் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.