Meera Mithun மீரா மிதுன் கவர்ச்சியான புகைப்படங்களையும், வீடியோக்களையும் வழக்கமாக கொண்டுள்ளார். தற்போது கூட பாத் டிரெஸில் பாத்ரூமில் இருந்து கொண்டு வீடியோ வெளியிட்டுள்ளார். இந்த வீடியோவை நெட்டிசனர்கள் விமர்சித்து வருகின்றனர்.
மாடலாக தனது வாழ்க்கையை தொடங்கியவர் மீரா மிதுன். மாடலாக இருந்து கொண்டு சினிமாவில் அறிமுகமானார்.
இயக்குநர் ஸ்ரீ கணேஷ் இயக்கத்தில் வெற்றி, எம்.எஸ்.பாஸ்கர், அபர்ணா பாலமுரளி ஆகியோர் பலர் நடித்த 8 தோட்டாக்கள் படத்தில் மீரா மிதுனுக்கும் வாய்ப்பு கிடைத்தது. இந்த படத்தில் மது என்ற கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.
இந்தப் படத்தைத் தொடர்ந்து, விக்னேஷ் சிவன் இயக்கத்தில் சூர்யா, ரம்யா கிருஷ்ணன், கீர்த்தி சுரேஷ், கலையரசன் ஆகியோர் பலர் நடித்திருந்தனர்.
இந்தப் படத்தில் இனியனாக வரும் கலையரசனுக்கு மனைவி கதாபாத்திரத்தில் மீரா மிதுன் நடித்திருந்தார். இதே போன்று இயக்குநர் சந்துரு கேஆர் இயக்கத்தில் வந்த போதை ஏறி புத்தி மாறி என்ற படத்திலும் நடித்துள்ளார்.
இந்த நிலையில், விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக் பாஸ் தமிழ் நிகழ்ச்சியின் 3 ஆவது சீசனில் கலந்து கொண்டார். இந்நிகழ்ச்சியின் மூலம் பலரது எதிர்ப்பையும், விமர்சனத்தையும் பெற்றார்.
அதோடு, பிரபலமும் ஆனார். இந்நிகழ்ச்சியின் போது ஒரு போட்டியாளராக கலந்து கொண்ட சேரன் தன்னை தவறான முறையில் தொடுவதாக அவர் மீது குற்றம்சாட்டினார். இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.
பிக் பாஸ் நிகழ்ச்சியிலிருந்து வெளியேறிய மீரா மிதுனுக்கு போதுமான சினிமா வாய்ப்பு அமையவில்லை. இதனால், தொடர்ந்து கவர்ச்சி புகைப்படங்களையும், வீடியோக்களையும் தனது சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்டு வருவதை வாடிக்கையாக கொண்டுள்ளார்.
அதோடு, தன்னைப் பார்த்துதான் மற்ற நடிகைகளும் போட்டோஷூட் நடத்துவதாக பரபரப்பாக குற்றம் சாட்டினார். இந்த நிலையில், தான் உடலில் ஒட்டு துணி கூட இல்லாமல் ஒரு நிர்வாணமாக இருக்கும் ஒரு புகைப்படத்தை பதிவிட்டுள்ளார்.
அந்த புகைப்படத்தில் உடல் முழுவதும் கருப்பு நிற மேக்கப்பில் இருப்பது போன்றும், உடலில் ஒரு துணி கூட இல்லாத நிலையிலும் கழுத்து, காது, கை மற்றும் விரலில் மட்டும் நகைகள் அணிந்தவாறு இருக்கிறார்.
பிராண்டுகள், வார இதழ்கள் மற்றும் பத்திரிக்கைகள் என்று ஒவ்வொரு போட்டோஷூட்டும், பிரபலமான சூப்பர் மாடல்களால் தான் செய்யப்படுகிறது.
மாடலே இல்லாதவற்கள் ஏன் போட்டோஷூட் செய்து இந்திய பேஷன் சீனை குறைக்கிறார்கள் என்று எனக்கு புரியவில்லை என்று டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.
இந்த புகைப்படத்தை வைத்து மீரா மிதுனை நெட்டிசன்கள் கடுமையாக சாடினர். அதற்குள், மற்றொரு வீடியோ ஒன்றை வெளியிட்டு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.
ஆம், குளியலறைக்குள் இருந்து கொண்டு பாத் டிரெஸில் நின்றபடி போஸ் கொடுத்துள்ளார். அந்த வீடியோவை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
அதற்கு நீண்ட நேர குளியலுக்கு பிறகுதான் மகிழ்ச்சி கிடைக்கிறது என்றும், மற்றொன்றில் தவறான அர்த்தம் இருப்பது போன்றும் கேப்ஷன் பதிவிட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
தற்போது இந்த வீடியோதான் சமூக வலைதளங்களில் அதிகளவில் வைரலாகி வருகிறது.