Bigg Boss Telugu Seson 4; பிக் பாஸ் சீசன் 4 எப்போது? இதோ அதிகாரப்பூர்வ அறிவிப்பு! பிக் பாஸ் சீசன் 4 நிகழ்ச்சி எப்போது தொடங்கப்படும் என்பதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.
பிக் பாஸ் தெலுங்கு சீசன் 4 நிகழ்ச்சி தொடங்கப்படுதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.
கடந்த 2017 ஆம் ஆண்டு ஜூலை 16 ஆம் தேதி ஸ்டார் மார் தொலைக்காட்சியில் முதல் முறையாக பிக் பாஸ் தெலுங்கு சீசன் 1 நிகழ்ச்சி ஒளிபரப்பு செய்யப்பட்டது. இந்த நிகழ்ச்சியை ஜூனியர் என் டிஆர் தொகுத்து வழங்கினார்.
இதையடுத்து, இந்த நிகழ்ச்சியின் 2ஆவது சீசனை நானி தொகுத்து வழங்கினார். பிக் பாஸ் தெலுங்கு சீசன் 2 கடந்த 2018 ஆம் ஆண்டு ஜூன் 10 ஆம் தேதி ஒளிபரப்பு செய்யப்பட்டது.
இதே போன்று கடந்த 2019 ஆம் ஆண்டு ஜூலை 21 ஆம் தேதி பிக் பாஸ் தெலுங்கு சீசன் 4 ஒளிபரப்பு செய்யப்பட்டது. இந்த நிகழ்ச்சியை அக்கினேனி நாகர்ஜூனா தொகுத்து வழங்கினார்.
இந்த நிலையில், இந்த ஆண்டுக்கான பிக் பாஸ் தெலுங்கு சீசன் 4 நிகழ்ச்சி குறித்து கொரோனா காரணமாக இதுவரை எந்த அறிவிப்பும் வரவில்லை.
கொரோனா லாக்டவுன் காரணமாக இந்த நிகழ்ச்சியின் படப்பிடிப்பு தொடங்கப்படவில்லை.
இந்த நிலையில், வரும் 31 ஆம் தேதியுடன் லாக்டவுன் முடிவடையும் நிலையில், பிக் பாஸ் தெலுங்கு சீசன் 4 நிகழ்ச்சிக்கான பணிகள் வேகமாக நடந்து வருகிறது.
கடந்த மாதம் ஜூலை மாதம் தொடங்கப்பட்ட பிக் பாஸ் நிகழ்ச்சி இந்த ஆண்டு ஒரு மாதம் காலதாமதமாக தொடங்கப்பட இருக்கிறது.
ஆம், வரும் ஆகஸ்ட் மாதம் இறுதியில் பிக் பாஸ் தெலுங்கு சீசன் 4 நிகழ்ச்சி தொடங்கப்பட இருக்கிறது என்று அதிகாரப்பூர்வ அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான ஆயத்த பணிகள் ஏற்கனவே அன்னபூர்ணா ஸ்டூடியோவில் தொடங்கப்பட்டுள்ளது.
இந்த நிகழ்ச்சியையும் நாகர்ஜூனா தொகுத்து வழங்க இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிகழ்ச்சியில் யாரெல்லாம் கலந்து கொள்ள இருக்கிறார்கள் என்பது குறித்து விரைவில் அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஆனால், பிக் பாஸ் தமிழ் சீசன் 4 நிகழ்ச்சி குறித்து இதுவரை எந்த அறிவிப்பும் வரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.