Home சினிமா கோலிவுட் திருமணத்திற்கு தயாரான நடிகை: மாப்பிள்ளை இவர் தானாம்!

திருமணத்திற்கு தயாரான நடிகை: மாப்பிள்ளை இவர் தானாம்!

255
0
Niharika Konidela

திருமணத்திற்கு தயாரான நடிகை: மாப்பிள்ளை இவர் தானாம்! விஜய் சேதுபதியின் ஒரு நல்ல நாள் பாத்து சொல்றேன் படத்தில் நடித்த நடிகை நிஹாரிகா கொனிடாலா தனது காதலன் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.

நடிகை நிஹாரிகா கொனிடாலா தனது காதலன் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக திகழ்பவர் நடிகர் விஜய் சேதுபதி. இவர் நடித்த ஒரு நல்ல பாத்து சொல்றேன் படத்தின் மூலம் ஹீரோயினாக அறிமுகமானவர் நடிகை நிஹாரிகா கொனிடாலா.

இவர் ஒக மனசு, ஹேப்பி வெட்டிங், சூர்யகாந்தம், சைரா நரசிம்ம ரெட்டி ஆகிய படங்களில் நடித்துள்ளார். தற்போது அசோக் செல்வன் நடிக்கும் புதிய படத்தில் அவருக்கு ஜோடியாக நடிப்பதாக கூறப்படுகிறது.

இவர் தெலுங்கு நடிகர் சிரஞ்சீவியின் தம்பி நாகபாபுவின் மகள். நிஹாரிகாவும், தெலுங்கு நடிகர் பிரபாஸும் காதலிப்பதாகவும், விரைவில் திருமணம் செய்து கொள்ள இருப்பதாக கூறப்பட்டது. இதனை இருவரும் மறுத்தனர்.

இதையடுத்து, நிஹாரிகாவுக்கு மாப்பிள்ளை பார்த்து வருவதாக நாகபாபு கூறியிருந்தார். இந்த நிலையில், நிஹாரிகா திருமணம் செய்து கொள்ள இருப்பதாக கூறப்படுகிறது.

கடந்த சில தினங்களுக்கு முன்பு இன்ஸ்டாகிராம் பக்கத்தில் மாப்பிள்ளையின் முகம் தெரியாதபடி அவரை கட்டிப்பிடித்தவாறு இருக்கும் புகைப்படத்தை பகிர்ந்துள்ளார்.

இதைத் தொடர்ந்து, மற்றொரு புகைப்படத்தை பகிர்ந்துள்ளார். அதில், மாப்பிள்ளையின் முகம் தெரியும்படியும், என்னுடையவர் என்றும் குறிப்பிட்டு தனது திருமணத்தை உறுதி செய்துள்ளார்.

அவரது பெயர் வெங்கட சைதன்ய ஜோனாலகாடு. இவர், குண்டூரைச் சேர்ந்தவர். மேலும், ஐடி நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். இவரைத் தான் திருமணம் செய்து கொள்ள இருக்கிறாராம்.

விரைவில், திருமண தேதியும் அறிவிக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது. நிஹாரிகாவுக்கு நடிகர், நடிகைகள் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here