Oviya Video; நான் மேக்கப் இல்லைனா இப்படித்தான் இருப்பேன்: ஓவியா நக்கல்! கொரோனா லாக்டவுனால் வீட்டிலேயே இருக்கும் ஓவியா நான் மேக்கப் இல்லை என்றால் இப்படித்தான் இருப்பேன் என்று நக்கலாக பேசிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
ஓவியாவின் வீடியோவின் ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
களவாணி படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானவர் ஓவியா. ஆனால், கமல் ஹாசன் தொகுத்து வழங்கிய பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூலம் உலகம் முழுவதும் பிரபலமானார்.
எப்போதும் உண்மையை மட்டும் பேசி, நேர்மையாக நடந்து கொண்டு ஓவியா ஆர்மி உருவாக காரணமாக இருந்தார்.
ஓவியா ஆர்மி மூலமாக ரசிகர்கள் ஓவியாவை கொண்டாடினர். பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூலம் ஆரவ்வை காதலித்தார்.
அவரிடமிருந்து மருத்துவ முத்தமும் பெற்றுக் கொண்டார். இது அப்போது பெரும் பரபரப்பாக பேசப்பட்டது. இந்த நிலையில், கொரோனா லாக்டவுன் காரணமாக வீட்டிலேயே இருக்கும் ஓவியா ரசிகர்களுடன் உரையாடியுள்ளார்.
அப்போது எடுக்கப்பட்ட வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில், ஓவியா கூறியிருப்பதாவது: நான் மேக்கப் இல்லை என்றால் இப்படித்தான் டல்லாக இருப்பேன்.
எனது முகமும் இப்படித்தான் இருக்கும். மேக்கப்பில் இருக்கும் போது நடிகைகள் ஒரு மாதிரியும், மேக்கப் இல்லையென்றால் ஒரு மாதிரியும் தெரிவார்கள்.
இது அனைவருக்கும் தெரிந்த ஒன்று தான் என்றார். மேலும், பிக் பாஸ் நிகழ்ச்சி ஒரு சிறந்த அனுபவம். இப்போது உங்களுக்கு ஒரு ஐடியா கிடைத்திருக்கும்.
ஒரே வீட்டில் அடைந்திருந்தால் என்ன நடக்கும் என்று உங்களுக்கு புரிந்திருக்கும். கிட்டத்தட்ட சைக்கோ மாதிரி ஆகிவிடுவோம்.
இத்தனை பேர் நம்மை பார்த்துக் கொண்டிருக்கிறார்கள் என்ற ஒரு அழுத்தமும் பயமும் இருக்கும்.
மேலும், பிக் பாஸ் கொடுக்கும் அழுத்தமும் பயமும் இருக்கும். அதன் பிறகு போட்டியாளர்களுடன் கருத்து வேறுபாடு. இதையெல்லாம் கொண்டது தான் பிக் பாஸ் நிகழ்ச்சி.
இது ஒரு மாதிரியான கேம். நிறைய சந்தோஷங்கள் இருந்தது. நிறைய விளையாட்டு தனம், காமெடி எல்லாம் இருந்தது.
பிக் பாஸ் நிகழ்ச்சியிலிருந்து வெளியேறிய பிறகு கிட்டத்தட்ட ஒரு மாதம் என்னால் ஒன்றுமே முடியவில்லை. அதிலிருந்து மீண்டு வருவதற்கு நீண்ட நாட்கள் ஆனது என்றார்.
மேலும், காதல் தோல்வி குறித்து கூறுகையில், அனைவரது வாழ்க்கையிலும் காதல் தோல்வி, பிரேக்கப் என்று அனைத்தும் நடக்கும்.
ஆனால், பிரேக்கப் தான் நம்மை இன்னும் வலிமையாக்கும். காதல் தோல்வி வந்தால் அதிலிருந்து அடுத்த கட்டத்திற்கு நகர்ந்து செல்ல வேண்டும். அதையே நினைத்து சோகமாக இருப்பதினால் எந்தவித பலனும் இல்லை.
வாக்கையில் தற்கொலை குறித்து பேசிய அவர் கூறியிருப்பதாவது: கண்டிபபாக அனைவருமே ஏதாவது ஒரு சூழ்நிலையில், தற்கொலை செய்து கொள்ள வேண்டும் என்று நினைத்துக் கொள்வார்கள்.
தற்கொலை தான் முடிவு இல்லை. எந்தவொரு பிரச்சனையாக இருந்தாலும், அதிலிருந்து மீண்டு வருவது தான் சரியான தீர்வு. இதைவிட வேறெதுவும் இருக்காது என்றார்.
அதன் பிறகு ஜூலியைப் பற்றி பேசிய ஓவியா, ஜூலி ஒரு நல்ல பெண். உண்மையில் அவள் ஒரு பாவம். இத்தனை பேர் அவரை வெறுக்கும் போது கூட துணிச்சலாக தைரியமாக அனைத்தையும் கடந்து வந்திருக்கிறாள் என்றாள் அவளை பாராட்ட வேண்டும்.
ஒரு ஆள் உங்களை பிடிக்கவில்லை என்று சொல்லும் போது உங்களுக்கு எவ்வளவு கஷ்டமாக இருக்கும்? அதையெல்லாம் தாண்டி வருவது தான் ரொம்ப கஷ்டம் என்றார்.
ஏன் எப்போதும் சரக்கடித்த மாதிரியே இருக்கிறீர்கள் என்று கேட்ட கேள்விக்கு ஓவியா கூறியிருப்பதாவது:
இல்லை இல்லை. நான் எப்போதும் இப்படித்தான் இருப்பேன். நான் நார்மலாகவே ஹைபெராக இருப்பேன். ஆனாலும், நான் குடிப்பேன்.
எனக்கு ரெட் ஒயின் ரொம்பவே பிடிக்கும். யாராவது எனக்கு ரெட் ஒயின் பரிசாக கொடுக்க நினைத்தால் கொடுக்கலாம் என்று கேட்டுக் கொண்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.