Home சினிமா கோலிவுட் பொன்மகள் வந்தாள் ரிலீஸ் எதிரொலி: சூர்யாவை புகழ்ந்த பார்த்திபன்!

பொன்மகள் வந்தாள் ரிலீஸ் எதிரொலி: சூர்யாவை புகழ்ந்த பார்த்திபன்!

0
310
Parthiepan

பொன்மகள் வந்தாள் ரிலீஸ் எதிரொலி: சூர்யாவை புகழ்ந்த பார்த்திபன்! ஜோதிகா நடிப்பில் உருவாகியுள்ள பொன்மகள் வந்தாள் படம் வரும் 29 ஆம் தேதி வெளியாகவுள்ள நிலையில், சூர்யாவின் துணிச்சலை பார்த்திபன் பாராட்டி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

பொன்மகள் வந்தாள் படம் அமேசான் பிரைம் வீடியோவில் வெளியாகும் நிலையில், சூர்யாவின் துணிச்சலையும், தைரியத்தையும் பார்த்திபன் பாராட்டி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

அறிமுக இயக்குநர் ஜே ஜே பெட்ரிக் இயக்கத்தில் ஜோதிகா வழக்கறிஞராக நடித்துள்ள படம் பொன்மகள் வந்தாள்.

சூர்யாவின் 2டி எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் இந்தப் படத்தை தயாரித்துள்ளது. இந்தப் படத்திற்கு 96 படத்தின் புகழ் கோவிந்தா வசந்தா இசையமைத்துள்ளார்.

கொரொனா லாக்டவுன் காரணமாக பொன்மகள் வந்தாள் படம் திரையரங்குகள் வெளியாகவில்லை. மாறாக, ஓடிடி தளத்தில் வெளியாக இருக்கிறது.

அமேசான் பிரைம் வீடியோ நிறுவனம் இந்தப் படத்தை தங்களது தளத்தில் வெளியிடுகிறது. வரும் 29 ஆம் தேதி பொன்மகள் வந்தாள் படம் நேரடியாக டிஜிட்டலில் வெளியாகிறது.

இதனை நடிகர் பார்த்திபன் வரவேற்று வீடியோ வெளியிட்டுள்ளார். அதில், அவர் கூறியிருப்பதாவது: நமது முடியை திருத்தலாமா? (முடி(வுகள்) திருத்தமா) வேண்டாமா என்று யோசிக்கிற நிலைமை தற்போது வந்துவிட்டது.

திருத்தம் என்பது முடியில் மட்டும் இல்லை. சில முடிவுகளில் திருத்தம் இல்லாத மாதிரி தோன்றுகிறது.

நிறைய முடிவுகள் திருத்தி எழுதப்பட வேண்டும் என்று தோன்றுகிறது. அது சட்ட திருத்தமாக இருந்தாலும் சரி, தொழில் சார்ந்த வரைமுறை திட்டங்களாக இருந்தாலும் சரி, நிறைய விஷயங்கள் புரியாமல் நடந்து கொண்டிருக்கிறது.

உதாரணத்திற்கு இந்த டாஸ்மாக் திறப்பது சம்பந்தமாக நிறைய எதிர்ப்புகள் வந்தது. நானே ஒரு கட்சியின் தலைவராக இருந்தால், எதிர்க்கட்சிகள் கூறுவது போன்றும், கமல் ஹாசன் கூறுவது போன்றும், மக்கள் இதற்கு என்று சரியான தீர்ப்பு கொடுப்பார்கள்.

மறுபடியும் நீங்கள் ஆட்சிக்கு வர வேண்டும் என்று நினைத்தால் மதுக்கடைகளை திறக்க வேண்டாம் என்று ரஜினிகாந்த் கூறுவது போன்றும் என்று பல வழிகளில் சரியான முடிவை சொல்ல முடியாத நிலை எப்படி பொது ஜனங்களுக்கு இருக்கிறதோ அதே போன்று தான் எனக்கும் இருக்கிறது.

இத்தனை எதிர்ப்புகளையும் தாண்டி டாஸ்மாக் கடைகள் திறக்கப்பட காரணம் என்ன? அதன் வருமானத்தை நம்பியே தமிழகம் இருக்கிறதா? டாஸ்மாக் திறப்பது சரி என்று முடிவு எடுப்பதற்கு பின்னணி என்ன?

சாராயக் கடைகள் திறக்கும் போது ஏன் சலூன் கடைகள் திறக்கக் கூடாது? ஏன் கோயில்கள் திறக்கக் கூடாது? இது போன்று நிறைய குழப்பங்கள் இருக்கிறது.

இதெல்லாம் ஒரு புறம் இருக்கட்டும், ஜோதிகாவின் பொன்மகள் வந்தாள் படம் வரும் 29 ஆம் தேதி அமேசான் பிரைம் வீடியோவில் வெளியாக இருக்கிறது.

தைரியம் தான் புருஷ லட்சணம். ஒரு தைரிய லட்சுமியின் புருஷன், எத்தனை வைராக்கியத்தோடு அத்துணையின் காதல் கணவராக, கௌரவ காவலராக வைத்த காலை பின்வாங்காதா வையக வீரராக (ஓடிடி) ஒழுக்கம், தெளிவு, தைரியமுடன்  பொன்மகள் வந்தாள் படத்தை மே 29ல் அமேசானில் வெளியிடுகிறார் வாழ்த்துக்கள்.

இந்தப் படத்தின் அறிமுக இயக்குநர் பெட்ரிக் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் அனைவருக்கும் குறிப்பாக இணை தயாரிப்பாளர்கள் ஆகியோருக்கும் என் மனப்பூர்வமான வாழ்த்துக்கள் என்று பதிவிட்டுள்ளார்.

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here