Pawan Kalyan; கொரோனா: பவன் கல்யாண் ரூ.2 கோடி நிதியுதவி! கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைக்காக நடிகர் பவன் கல்யாண் ரூ.2 கோடி நிதியுதவி அளித்துள்ளார்.
கொரோனா வைரஸ் காரணமாக நாளுக்கு நாள் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையும், பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது.
இந்தியாவில் மட்டும் கொரோனாவுக்கு 13 பேர் உயிரிழந்துள்ளனர். பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 657ஆக உயர்ந்துள்ளது.
மத்திய மாநில அரசுகள் தொடர்ந்து கொரோனாவுக்கு எதிராக போராடி வருகிறது. எனினும், வரும் ஏப்ரல் 14 ஆம் தேதி வரை இந்தியாவில் 21 நாட்களுக்கு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
கொரோனா வைரஸ் காரணமாக தடுப்பு நடவடிக்கைக்காக, சட்டமன்ற உறுப்பினர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் மாநில முதல்வரின் நிவாரண நிதிக்கும், பிரதமரின் தேசிய பேரிடர் நிவாரண நிதிக்கும் நிதியுதவி அளித்து வருகின்றனர்.
இதன் ஒரு பகுதியாக நடிகரும், ஜனசேனா கட்சியின் தலைவருமான பவன் கல்யாண், கொரோனா தடுப்பு நடவடிக்கைக்காக, பிரதமரின் தேசிய பேரிடர் நிவாரண நிதிக்கு ரூபாய் 1 கோடியும், ஆந்திரா மற்றும் தெலங்கானா மாநில முதல்வரின் நிவாரண நிதிக்கு தலா ரூபாய் 50 லட்சம் நிதியுதவியை அளிப்பதாக அறிவித்துள்ளார்.
ஆக மொத்தம் ரூ.2 கோடி நிதியுதவி வழங்குவதாக அறிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.