Plan Panni Pannanum Trailer; பிளான் பண்ணி பண்ணனும் (Plan Panni Pannanum (P3)) படத்தின் இசை வெளியீடு மற்றும் டிரைலர் வெளியிடப்பட்டுள்ளது.
ரியோ ராஜ் மற்றும் ரம்யா நம்பீசன் நடிப்பில் உருவாகியுள்ள பிளான் பண்ணி பண்ணனும் படத்தின் இசை மற்றும் டிரைலர் வெளியிடப்பட்டுள்ளது.
சின்னத்திரையில் இருந்து வெள்ளித்திரைக்கு வந்த நடிகர்களின் பட்டியலில் நடிகர் ரியோ ராஜ் ஒருவர். நெஞ்சமுண்டு நேர்மையுண்டு ஓடு ராஜா படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமானார்.
தற்போது பிளான் பண்ணி பண்ணனும் (P3) படத்தில் முன்னணி ரோலில் நடித்துள்ளார். இவருக்கு ஜோடியாக ரம்யா நம்பீசன் நடித்துள்ளார்.
இந்த நிலையில், பிளான் பண்ணி பண்ணனும் படத்தின் டிரைலர் மற்றும் இசை வெளியீட்டு விழா சென்னை சத்யம் திரையரங்கில் நடந்துள்ளது.
இந்நிகழ்ச்சிக்கு நடிகர் சிவகார்த்திகேயன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். இன்று வெளியாகியுள்ள டிரைலரில் படத்தில் இடம்பெற்றுள்ள மொத்த அம்சங்களும் காட்டப்பட்டுள்ளது.
அதில், 4 பேரு ரெட்டு காரு, ரெட்ரோ ஊரு – அடல்ஸ் ஒன்லியோ… பப்ளியான பொண்ணு, டெட்லியான பையன் ஜெட்லி மாதிரி ஃபாஸ்ட் – லவ் ஸ்டோர்கியோ…
டெர்ரரான அம்மா, முட்ட முழி அப்பா, முத்திப்போன மாமா – த்ரில்லர் ஸ்டோரியோ…. இது எல்லாத்துக்கு வாய்ப்பில்லை ராஜா வாய்ப்பில்லை ராஜா வாய்ப்பில்லை ராஜா என்று கூற என்னதான் கதை என்று கேட்கும் அளவிற்கு டிரைலர் காட்டப்பட்டுள்ளது.
இந்த டிரைலரில் கங்கை அமரனின் பின்னணி குரல் வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
பிளான் பண்ணி பண்ணனும் படத்தை இயக்குநர் பத்ரி வெங்கடேஷ் இயக்கி வருகிறார். காமெடி கதையை மையப்படுத்திய இந்தப் படத்தில் ரியோவிற்கு ஜோடியாக நடிகை ரம்யா நம்பீசன் நடித்துள்ளார்.
ராஜேஷ் குமார் தயாரிப்பில் உருவாகியுள்ள இந்தப் படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார்.
பிளான் பண்ணி பண்ணனும் படத்தில் ரோபோ சங்கர், தங்கதுரை, விஜி சந்திரசேகர், பால சரவணன், முனிஷ்காந்த் ஆகியோர் நடித்துள்ளனர்.
பிளான் பண்ணி பாடலில் தொடங்கி நீங்கும் போதில் வரை மொத்தம் 5 பாடல்கள் இடம்பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
கடந்த சில தினங்களுக்கு முன்புதான் ரியோ – ஸ்ருதி தம்பதியினருக்கு அழகான பெண் குழந்தை பிறந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.