Home சினிமா கோலிவுட் பாடகி எஸ்.ஜானகி நலமாக இருக்கிறார்: மகன் முரளி கிருஷ்ணா!

பாடகி எஸ்.ஜானகி நலமாக இருக்கிறார்: மகன் முரளி கிருஷ்ணா!

358
0
S Janaki

Playback Singer S Janaki; பாடகி எஸ்.ஜானகி நலமாக இருக்கிறார்: மகன் முரளி கிருஷ்ணா! பின்னணி பாடகி எஸ் ஜானகி நலமுடன் தான் இருக்கிறார் என்றும், வதந்திகளை யாரும் நம்ப வேண்டாம் என்று அவரது மகன் முரளி கிருஷ்ணா தெரிவித்துள்ளார்.

எஸ் ஜானகி நலமுடன் தான் இருக்கிறார் என்று அவரது மகன் முரளி கிருஷ்ணா தெரிவித்துள்ளார்.

சினிமாவில் மூத்த பின்னணி பாடகியாக இருப்பவர் எஸ்.ஜானகி (82). ஹைதராபாத்தில் தனது குடும்பத்தினருடன் வசித்து வருகிறார்.

தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், ஹிந்தி, தெலுங்கு, ஒடியா, பெங்காலி, உருது, குஜராத்தி உள்ளிட்ட 17 இந்திய மற்றும் வெளிநாட்டு மொழிகளில் கிட்டத்தட்ட 48,000 பாடல்களுக்கு மேல் பாடியுள்ளார்.

இவரது இசையில் மயங்காதோர் யாரும் இல்லை. தமிழில் சுந்தரி நீயும், சுந்தரன் நானும், காற்றில் எந்தன் கீதம், கண்மணி அன்போடு காதலன், செந்தூர பூவே, எந்த பூவிலும், மச்சான பாத்தீங்களா, ஆகாய கங்கை, நான் ஆளான தாமரை என்று ஏராளமான பாடல்களை பாடியுள்ளார்.

வயது மூப்பு காரணமாக கடந்த 2018 ஆம் ஆண்டுடன் பாடல்கள் பாடுவதை  தவிர்த்துவிட்டார்.

இந்த நிலையில், எஸ் ஜானகி உடல்நிலை குறைவு காரணமாக காலமானதாக சமூக வலைதளங்களில் தகவல் வெளியானது.

இதைப் பார்த்து அதிர்ச்சியைடந்த அவரது மகன் முரளி கிருஷ்ணா கூறுகையில், தனது அம்மா உடல்நலமுடன் இருப்பதாகவும், வதந்திகளை யாரும் நம்ப வேண்டாம் என்றும் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இவரைத் தொடர்ந்து ஜானகியின் உடல்நலம் குறித்து இசையமைப்பாளர் தீனாவும் விளக்கம் கொடுத்துள்ளார்.

இது குறித்து அவர் கூறுகையில், ஜானகியுடன் பின்னணி பாடகர் எஸ்பி பாலசுப்பிரமணியம் தொடர்பு கொண்டு பேசியதாகவும், அப்போது, ஜானகி சிரித்து சிரித்து பேசியதாகவும், இதுவரை 6 முறை அவரது உடல்நலன் குறித்து வதந்தி வந்துவிட்டதாகவும் பேசியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இவ்வளவு ஏன், எஸ் ஜானகியின் உடல்நிலை குறித்து வதந்தி தொடர்பாக எஸ்பிபி வீடியோவும் வெளியிட்டுள்ளார்.

அதில், அவர் கூறியிருப்பதாவது, சமூக வலைதளத்தை சரியான முறையில் பயன்படுத்த வேண்டும் என்றும், ஜானகியின் உடல்நிலை குறித்து வதந்திகளை பரப்ப வேண்டாம் என்றும் கேட்டுக்கொண்டுள்ளார்.

மேலும், காலையிலிருந்து ஜானகி உடல்நிலை குறித்து கிட்டத்தட்ட 20 செல்போன் அழைப்புகள் வரை வந்துவிட்டது.

அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டதாகவும் செய்தி பரவியது. அவரிடம் நான் பேசினேன். அவர் நலமாகத்தான் இருக்கிறார் என்று குறிப்பிட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Previous articleஞாயிற்றுக்கிழமை புதிதாக 2889 கொரோனா தொற்றுகள், மொத்த கொரோனா எண்ணிக்கை 83,077: புதுடெல்லி
Next articleபிக் பாஸ் பிரபலம் ஹரிஷ் கல்யாண் பர்த்டே டுடே!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here