Home சினிமா கோலிவுட் பொன்மகள் வந்தாள் படத்தின் PreTrailer வீடியோ வெளியீடு!

பொன்மகள் வந்தாள் படத்தின் PreTrailer வீடியோ வெளியீடு!

319
0
Ponmagal Vandhal Pre Trailer

Ponmagal Vandhal Pre Trailer; பொன்மகள் வந்தாள் படத்தின் PreTrailer வீடியோ வெளியீடு! ஜோதிகா நடிப்பில் உருவாகியுள்ள பொன்மகள் வந்தாள் படத்தின் டிரைலர் நாளை வெளியாகும் நிலையில், PreTrailer வீடியோ வெளியாகியுள்ளது.

பொன்மகள் வந்தாள் டிரைலர் நாளை வெளியாகும் நிலையில், தற்போது PreTrailer வீடியோ ஒன்று வெளியாகி வைரலாகி வருகிறது.

அறிமுக இயக்குநர் ஜே ஜே பெட்ரிக் இயக்கத்தில் ஜோதிகா வழக்கறிஞராக நடித்துள்ள படம் பொன்மகள் வந்தாள். சூர்யாவின் 2டி எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் இந்தப் படத்தை தயாரித்துள்ளது. இந்தப் படத்திற்கு 96 படத்தின் புகழ் கோவிந்தா வசந்தா இசையமைத்துள்ளார்.

கொரொனா லாக்டவுன் காரணமாக பொன்மகள் வந்தாள் படம் திரையரங்குகள் வெளியாகவில்லை. மாறாக, ஓடிடி தளத்தில் வெளியாக இருக்கிறது.

அமேசான் பிரைம் வீடியோ நிறுவனம் இந்தப் படத்தை தங்களது தளத்தில் வெளியிடுகிறது. வரும் 29 ஆம் தேதி வெளியாக உள்ள நிலையில், பொன்மகள் வந்தாள் படத்தின் டிரைலர் நாளை வெளியாக இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

ஆனால், எத்தனை மணிக்கு வெளியாகும் என்று அறிவிக்கப்படவில்லை. அதற்கு முன்னதாக பொன்மகள் வந்தாள் படத்தின் சிறிய மோஷன் போஸ்டர் வீடியோ ஒன்றை படக்குழுவினர் தற்போது வெளியிட்டுள்ளனர்.

அந்த வீடியோவில், காணாமல் போன குழந்தைகளை தேடும் பணியில் போலீசார் ஈடுபட்டுள்ளனர்.

அப்போது, ஊட்டியில் அடர்ந்த காட்டுப்பகுதிக்குள் இரு ழந்தைகளை சடலங்களை போலீசார் கண்டு பிடிக்கின்றன. அது, காணாமல் போன குழந்தைகளின் சடலங்கள் என்று தெரியவருகிறது.

அதன் பிறகு ஜோதிகா, தாமதப்படுத்தப்பட்ட நீதி அநீதி என்று பேசுகிறார்.  அதோடு அந்த வீடியோ முடிகிறது.

36 வினாடிகள் மட்டுமே இருக்கும் இந்த வீடியோவை பார்க்கும் போதே த்ரில்லாக இருக்கும் நிலையில், நாளை டிரைலரும், வரும் 29 ஆம் தேதி படமும் வெளியாக இருக்கிறது.

ஆகையால், படமும் ஹிட் கொடுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்தப் படத்தில் ஜோதிகா உடன் இணைந்து பார்த்திபன், பாக்யராஜ், பாண்டியராஜன், பிரதாப் போத்தன், தியாகராஜன் ஆகியோர் பலரும் நடித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

SOURCER SIVAKUMAR
Previous articleதமன்னாவுக்கு கச்சிதமாக பொருந்திய மீசை: வைரலாகும் வீடியோ!
Next article37 வருடங்களுக்குப் பிறகு ரீமேக் செய்யப்படும் முந்தானை முடிச்சு!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here