Ajith Bala Issue; அஜித் – பாலா சர்ச்சை: அந்த ரூமுக்குள் என்ன நடந்தது? தயாரிப்பாளர் போட்டுடைத்த உண்மை! நான் கடவுள் படத்தில் அஜித் நடிக்க இருந்த நிலையில், பாலா – அஜித் இடையிலான மோதல் காரணமாக அந்தப் படத்தில் ஆர்யா நடித்தார்.
அஜித்துக்கும், பாலாவுக்கும் இடையிலான மோதல் குறித்து தயாரிப்பாளர் பி.எல்.தேனப்பன் விளக்கம் கொடுத்துள்ளார்.
இயக்குநர் பாலா இயக்கத்தில் ஆர்யா நடிப்பில் வந்த படம் நான் கடவுள். ஆனால், இந்தப் படத்தில் நடிக்க இருந்தது எனன்வோ அஜித். இவர் தான் ஒப்பந்தமும் செய்யப்பட்டிருந்தார்.
ஆனால், படப்பிடிப்பு தொடங்குவதற்கு முன்னதாகவே அஜித்துக்கும் பாலாவுக்கும் பிரச்சனை ஏற்பட்டதாகவும், அப்போது நடந்த பஞ்சாயத்தின் போது அஜித்தை பாலா அடித்துவிட்டதாகவும் வதந்தி பரவியது.
இந்த நிலையில், பல வருடங்களுக்குப் பிறகு அதற்கான விளக்கம் கிடைத்துள்ளது. இது குறித்து பிரபல தயாரிப்பாளர் பி.எல்.தேனப்பன் கூறுகையில், பாலாவுக்கும், அஜித்துக்கும் இடையில் கொடுக்கல் வாங்கல் பிரச்சனை இருந்தது உண்மை.
அதற்காக வைக்கப்பட்ட பஞ்சாயத்தின் போது, அஜித்துக்கு கொடுக்கப்பட்ட அட்வான்ஸ் தொகை மற்றும் அதற்குரிய வட்டியை பாலா கேட்டுள்ளார்.
ஆனால், இதற்கு அட்வான்ஸ் தொகையை மட்டுமே தருவதாக அஜித் கூறியதாகவும் தெரிகிறது.
ஒரு கட்டத்தில் இருவருக்கும் இடையில் கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் கோபமடைந்த அஜித் வட்டி பணத்தையும் தருவதாக ஒப்புக் கொண்டார்.
அதன் பிறகு அங்கிருந்து அஜித் புறப்பட்டுச் சென்றார் என்று அவர் கூறியுள்ளார். தற்போது தயாரிப்பாளர் கூறியதைத் தொடர்ந்து அஜித்தை, இயக்குநர் பாலா அடிக்கவே இல்லை என்பது தெளிவாகியுள்ளது.
அப்போது வந்த செய்தி வெறும் வதந்தியாகவே பார்க்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.