Home சினிமா கோலிவுட் இருளர் வாழ்க்கையை படமாக்கி வரும் சூர்யா: பேராசிரியர் கல்யாணி மகிழ்ச்சி!

இருளர் வாழ்க்கையை படமாக்கி வரும் சூர்யா: பேராசிரியர் கல்யாணி மகிழ்ச்சி!

291
0
Suriya Birthday

Suriya Agaram Foundation; இருளர் வாழ்க்கையை படமாக்கி வரும் சூர்யா: பேராசிரியர் கல்யாணி மகிழ்ச்சி! இருளர் வாழ்க்கையை படமாக்கி வரும் சூர்யாவுக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்ததோடு, அவரைப் பற்றிய சில முக்கியமான தகவல்களையும் பேராசிரியர் கல்யாணி தெரிவித்துள்ளார்.

இருளர்களின் வாழ்க்கையை மையமாக வைத்து உருவாகி வரும் ஒரு புதிய படத்தை சூர்யா தயாரித்து வருகிறார்.

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக இருப்பவர் நடிகர் சூர்யா. சமூக சேவையில் அதிக ஈடுபாடு கொண்டவர். ஏழை, எளிய மாணவர்களின் கல்விக்கு உதவி செய்து வருகிறார்.

இதில், சூர்யாவுக்கு வழியாகாட்டியாகவும், உறுதுணையாகவும் இருப்பவர் பேராசிரியர் கல்யாணி.

இவர், திண்டிவனம் பகுதியில் தாய்த்தமிழ் பள்ளி ஒன்றை நடத்தி வருகிறார். மேலும், அந்தப் பகுதியில் வசிக்கும் இருளர் மாணவர்களின் வாழ்க்கையில் வெளிச்சம் கொடுத்து வருகிறார்.

இன்று சூர்யாவின் 45ஆவது பிறந்தநாளை முன்னிட்டு சூர்யாவின் அறிமுகம் கிடைத்த நாட்களையும், அவருடன் பயணிக்கும் அனுபவம் குறித்தும் பகிர்ந்து கொண்டுள்ளார்.

இது குறித்து அவர் கூறுகையில், கடந்த 2007 ஆம் ஆண்டு பத்திரிக்கையாளர் த செ ஞானவேல் என்பவர் மூலம் சூர்யாவின் அறிமுகம் கிடைத்தது. அகரம் அறக்கட்டளையில் விதை என்ற கல்வி உதவித்திட்டத்தை சூர்யா தொடங்கினார்.

12 ஆம் வகுப்புக்குப் பிறகு மேல்படிப்பு சேர முடியாத வறுமையில் வாடும் மாணவர்களுக்கு உதவும் திட்டம் தான் இந்த விதை திட்டம்.

அப்படி வறுமையில், வாடும் மானவர்களை தேர்ந்தெடுக்கும் தேர்வுக்குழுவில் என்னையும் சேர்த்துக் கொண்டார்கள்.

அது எனக்கு மகிழ்ச்சியான பணி. 26 ஆண்டுகள் அரசுக் கல்லூரியில் பணியாற்றி அனுபவம் வாய்ந்தவன் என்ற முறையில், கல்வியில் வாய்ப்பு கிடைக்காத ஒடுக்கப்பட்ட மாணவர்களை அடையாளம் கண்டு உதவி செய்வதில் ஆர்வமாக நான் ஈடுபட்டேன்.

ஆரம்பத்தில் வருடத்திற்கு 200, 300 மாணவர்களுக்கு இலவச கல்வி வழங்கி வந்தோம். இன்று 2 ஆயிரத்திற்கும் அதிகமான மாணவர்களுக்கு இலவச கல்வி அளித்து வருகிறோம்.

அகரம் பவுண்டேசனுக்கு ஒரு மாணவர் வந்துவிட்டார் என்றால், அவரது வாழ்க்கை உயரும் என்பது உண்மை.

இருளர், ஈழத்தமிழர்களின் குழந்தைகள், நரிக்குறவர் இனத்தவர் என்று கூடுதல் முக்கியத்துவம் அளித்து அவர்களுக்கு இலவச கல்வி அளித்து வருகிறோம்.

அகரம் பவுண்டேசன் மூலமாக கல்வி பயின்ற இருளர் மாணவர் ஒருவர் பொறியியல் படிப்பு முடித்து பெரிய நிறுவனம் ஒன்றில் பெரிய பதவியில் பணியாற்றி வருகிறார்.

வெளிநாடு செல்லவும் இருக்கிறார். அவர் ஒரு ஏழை தொழிலாளியின் மகன். இருளர்களின் வாழ்க்கையை மையப்படுத்தி உருவாகி வரும் புதிய படம் ஒன்றை சூர்யா தயரித்து வருகிறார். அது முற்றிலும் லாக்கப் மரணம் தொடர்பானது.

அதில், இருளர் மக்களே நடித்துள்ளார்கள். இருளர் மக்கள் வசிக்கும் பகுதியிலேயே அந்தப் படத்தின் படப்பிடிப்பும் நடத்தப்பட்டுள்ளது.

சமூகத்தின் மீது அதிக அக்கறை கொண்ட சூர்யாவின் பிறந்தநாளுக்கு, எங்களது பள்ளியின் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் இருளர் மக்களின் சார்பாக சூர்யாவுக்கு வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன் என்று அவர் குறிப்பிட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Previous articleஎன் சகோதரர் மற்றும் நடிகர் சூர்யாவுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள்: சுரேஷ் ரெய்னா!
Next articleசூர்யாவின் வாடிவாசல் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீடு!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here