Raghava Lawrence; சொன்னதை செய்த ராகவா லாரன்ஸ்: தூய்மைப் பணியாளர்களின் வங்கிக் கணக்கில் ரூ.25 லட்சம்! ஏற்கனவே அறிவித்தபடி, தூய்மைப் பணியாளர்களின் வங்கி கணக்கில் நடிகர் ராகவா லாரன்ஸ் கொரோனா நிவாரண நிதியாக ரூ.25 லட்சம் செலுத்தியுள்ளார்.
ராகவா லாரன்ஸ் தூய்மைRaghava Lawrence has donated rs 25 Lakhs a part from his salary to Frontline workers through 5Star Creationsப் பணியாளர்களின் வங்கிக் கணக்கில் ரூ.25 லட்சம் செலுத்தி தான் சொன்னதை செய்துள்ளார்.
கொரோனா தொற்று காரணமாக பாதிக்கப்பட்டுள்ள சினிமா தொழிலாளர்களுக்கு பிரபலங்கள் பலரும் நிதியுதவி, பொருளுதவி அளித்து வருகின்றனர்.
அந்த வகையில், நடிகர் ராகவா லாரன்ஸ் முதலில் ரூ.3 கோடி நிதியுதவி அளித்திருந்தார்.
அதில், பிரதமர் நிவாரண் நிதிக்கு ரூ.50 லட்சம், தமிழக முதல்வர் நிவாரண நிதிக்கு ரூ.50 லடசம், நடனக் கலைஞர் சங்கத்திற்கு ரூ.50 லட்சம், பெப்சி தொழிலாளர்களுக்கு ரூ.50 லட்சம், மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ. 25 லட்சம், ராயபுரம் மக்களுக்கு உதவும் வகையில் ரூ.75 லட்சம் என்று வழங்கியுள்ளார்.
தொடர்ந்து, தூய்மைப் பணியாளர்களுக்கு உதவும் வகையில், தான் அடுத்து நடிக்கும் படத்திலிருந்து ரூ.25 லட்சம் வழங்குவதாக அறிவிப்பு வெளியிட்டிருந்தார்.
இந்த நிலையில், லாரன்ஸின் அறிவுறுத்தலின் படி, தூய்மைப் பணியாளர்களின் வங்கிக் கணக்கில் ரூ.25,38,750 நேரடியாக செலுத்தப்பட்டுள்ளதாக தயாரிப்பாளர் பைவ் ஸ்டார் கதிரேசன் தெரிவித்துள்ளார்.
இதன் மூலம், 3,385 தூய்மை பணியாளர்கள் பயனடைந்துள்ளதாக அவர் கூறியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.