Home சினிமா கோலிவுட் வீட்டுக்குள்ளேயே இப்படி செய்யும் பிக் பாஸ் ரைசா!

வீட்டுக்குள்ளேயே இப்படி செய்யும் பிக் பாஸ் ரைசா!

336
0
Raiza Wilson Squash Court

Raiza Wilson; வீட்டுக்குள்ளேயே இப்படி செய்யும் பிக் பாஸ் ரைசா! லாக்டவுனில் வீட்டிலேயே இருக்கும் நிலையில், ரைசா வில்சன் வீட்டிற்குள்ளேயே ஸ்குவாஷ் விளையாடி வருகிறார்.

வீட்டிற்குள்ளேயே நடிகை பிக் பாஸ் ரைசா வில்சன் ஸ்குவாஷ் விளையாடி வரும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

இந்தியாவில் கொரோனா பீதி காரணமாக ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. வரும் மே 3 ஆம் தேதி வரையில் ஊரடங்கு உத்தரவு அமலில் இருக்கிறது.

இதன் காரணமாக அப்பாவி மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. எனினும் கொரோனா நிவாரண நிதி வழங்கப்பட்டு வருகிறது.

கொரோனா ஊரடங்கு உத்தரவு காரணமாக சினிமா பிரபலங்கள் பலரும் வீட்டிற்குள்ளேயும் பிஸியாகவே இருக்கின்றனர்.

வீட்டு வேலைகள் சமையல், துணி துவைப்பது, வீட்டை சுத்தம் செய்வது என்றும், தோட்ட வேலை பார்ப்பது, உடற்பயிற்சி செய்வது, யோகா, ரசிகர்களுடன் உரையாடுவது என்றும் பிஸியாக இருக்கின்றனர்.

இந்த நிலையில், பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூலம் பிரபலமான ரைசா வில்சன் தொடர்ந்து விஐபி 2, பியார் பிரேமா காதல், தனுசு ராசி நேயர்களே ஆகிய படங்களில் நடித்துள்ளார்.

தற்போது, அலைஸ், காதலிக்க யாருமில்லை, எஃப்.ஐ.ஆர், ஹேஷ்டேக் லவ் ஆகிய படங்களில் நடித்து வருகிறார்.

இந்த நிலையில், கொரோனா காரணமாக வீட்டில் இருக்கும் ரைசா வில்சன், தனது வீட்டின் உள்புற சுவரை ஸ்குவாஷ் விளையாட்டு தளமாக மாற்றி அவர் ஸ்குவாஷ் விளையாடுவது போன்று ஒரு வீடியோவை பதிவிட்டுள்ளார்.

மேலும், வீட்டில் எனது சொந்த சிறிய ஸ்குவாஷ் கோர்ட்டை உருவாக்கியுள்ளேன் என்று பதிவிட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here