ரஜினி அஜித் விஜய்: தேசிய விருது எப்போது கிடைக்கும். ஏன் தேசிய விருது கிடைக்கவில்லை? சினிமா செய்திகள். cinema news in tamil.
தமிழ் சினிமா முன்னணி நடிகர்கள்
ரஜினி, அஜித், விஜய் மூவருக்கும் எப்போது தேசிய விருது கிடைக்கும் என்பதை இந்த பதிவில் பார்ப்போம்.
தமிழ் சினிமாவில் 40 வருடமாக நடித்து வருபவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், 25 வருடத்திற்கு மேலாக நடித்து வருபவர்கள் தல அஜித் மற்றும் தளபதி விஜய் அவர்கள்.
தமிழில் முதன்மையாகவும் சிறந்த நடிகராகவும் மூவரும் இருந்து வருகிறார்கள். ஆனால், இவர்களின் நடிப்புக்கு ஏன் தேசிய விருது கிடைக்கவில்லை?
ரசிகர்களுக்கான நடிப்பு
நீங்கள் என்னை பார்த்து சொல்லலாம், விருதுக்காக எங்கள் தலைவர், தல, தளபதி நடிக்கவில்லை ரசிகர்களுக்கு மட்டுமே நடித்து வருகிறார்கள் என்று.
நீங்க சற்று கவனித்துப் பார்த்தால் மாஸான படங்களைத் தேர்வு செய்து ஒரு வட்டத்திற்குள் சுற்றி வருகிறார்கள்.
ஓப்பனிங் பாடல், கதைக்கு தேவையில்லாத முன்னனி நடிகை, காமெடியன், இறுதியில் நடிகரிடம் சாகும் வில்லன்கள் இது மட்டுமே மூவரின் படத்தில் இடம் பெறுகிறது.
படம் சலிப்பில்லாமல் மாஸாகவும் செல்கிறது. இன்னும் சில காலங்களில் நமக்கு அது வெறுப்பு ஆகிவிடும்.
உண்மையான ரசிகன் என்றும் வெறுக்க மாட்டான் என்று நீங்கள் செல்லலாம் ஆனால் நான் செல்வது கதைகளை மட்டும்.
சிறந்த படங்கள்
ரஜினி சிறந்த நடிப்பிற்கு ஆறிலிருந்து அறுபதுவரை, முள்ளும் மலரும், ராகவேந்திரா, கபாலி, தளபதி, தம்பிக்கு எந்த ஊர் போன்ற படங்களே பேசும்.
அஜித் அவருக்கு முகவரி, கண்டுக்கொண்டேன் கண்டுக்கொண்டேன், காதல் கோட்டை, கிரீடம், வாலி, ஆனந்த பூங்காற்றே படங்கள் சிறந்த படங்களாக அமைந்தது.
விஜய்க்கு கத்தி, துப்பாக்கி, நண்பன், குஷி, என்றென்றும், காதலுக்கு மரியாதை போன்ற படங்கள் இவரின் நடிப்பை பேசும்.
ஆனால் சமீப காலமாகவே இவர்கள் கதைத் தேர்வில் சொதப்புகிறார்கள் போன்று தோன்றுகிறது. அவர்கள் கதை அம்சம் கொண்ட எதார்த்த படத்தில் நடித்தால் ரசிகர்கள் ஏற்க மாட்டார்கள் என்ற எண்ணத்தில் மாஸாகவே நடித்து வருகிறார்கள்.
குறைந்த பட்ஜெட் படத்தில் நடிக்கவும் யோசிக்கிறார்கள். காரணம் இவர்களைச் சுற்றி தமிழ் சினிமாவில் மிகப்பெரிய வியாபாரம் நடக்கிறது.
ஆனால் மூவரும் இளம் மற்றும் புதுமுக இயக்குனர்களுடன் பணியாற்ற முன்வந்து இருக்கிறார்கள் என்பது பெருமை கொள்ளும் விஷயமே.
நடிப்பிற்கு முக்கியத்துவம்
தனுஷ், சூர்யா, விக்ரம் போன்ற நடிகர்கள் கமர்ஷியல் படத்தில் இருந்து என்றோ வெளிவந்து நடிப்பிற்கு முக்கியத்துவம் கொடுக்கும் படத்தில் நடித்து வருகிறார்கள்.
ஆனால் அவர்களும் பெரிய நடிகரைப் பார்த்து இடை இடையில் கமர்ஷியல் படம் கொடுத்து வாங்கியும் கட்டிக் கொள்கிறார்கள்.
வியாபாரம் முக்கியம் தான். ஆனால், கதைகளமும் முக்கியம். நடிகருக்கு மாஸ் இல்லாத எதார்த்த நடிகராகவும் தன்னை மக்கள் மத்தியில் உருவாக்கி கொள்ளவும் வேண்டும்.
இவர்கள் மூவரும் சமீபகாலமாக படத்தில் பார்த்தால் சராசரி மற்றும் மிடில் கிளஸ் குடும்ப நடிகராக நடிக்கவே இல்லை.
அதுபோன்ற கதைகளை தேர்ந்தெடுத்து நடித்தால் மட்டுமே இவர்களுக்கு மட்டுமில்லை இவர்கள் படத்துக்கும் அதில் பணியாற்றிய யாருக்காவது ஒருவருக்கு தேசிய விருது கிடைக்க வாய்ப்பிருக்கும்.
அதிக பட்ஜெட் படமாக இருந்தாலும் அமீர்கான் படங்கள் டங்கல், பி.கே போன்ற படங்களைப் போல் தேர்வு செய்து நடிக்கலாம்.
ஆனால் மூவருமே மிகவும் அருமையான நடிகர்கள் மற்றுமில்லை நல்ல மனிதர்களும் கூட. தன்னை தவறாக பேசுபவர்களை கூட பெருமையாக பேசும் மனம் கொண்டவர்கள்.
இவரது ரசிகர்கள் மாறி மாறி பெருமையாக பேசாமல் கேலி செய்து ட்விட்டரில் ட்ரண்ட் செய்வதை வழக்கமாக வைத்திருக்கிறார்கள்.
அது அவர்களுக்கு மட்டுமில்லை அந்த நடிகருக்கும் தலைகுனிவு ஏற்படும் என்பதை மறந்து விடுகிறார்கள்.
இவர்களைக் குறை கூறுவதற்கு இந்த பதிவு இல்லை, இவர்களும் வாங்கலாமே என்ற நல்லெண்ணத்தில் தான் இந்த பதிவு.