Home சினிமா கோலிவுட் Ratham Ranam Rowthiram; சீறிப்பாஞ்சா வால் நட்சத்திரம்; பக்கத்துல வந்தா மரணத்துக்கு வியர்க்கும்!

Ratham Ranam Rowthiram; சீறிப்பாஞ்சா வால் நட்சத்திரம்; பக்கத்துல வந்தா மரணத்துக்கு வியர்க்கும்!

417
0
Ram Charan RRR Movie

RRR Movie Ram Charan; சீறிப்பாஞ்சா வால் நட்சத்திரம்; பக்கத்துல வந்தா மரணத்துக்கு வியர்க்கும்! ஆர்ஆர்ஆர் படத்தில் ராம் சரண் நடிக்கும் கதாபாத்திரத்தின் பெயர் வீடியோ வெளியிட்டு தெரிவிக்கப்பட்டுள்ளது.

ராம் சரண் நடிக்கும் கதாபாத்திரத்தின் பெயரை ஜூனியர் என்டிஆர் வெளியிட்டுள்ளார்.

பாகுபலி படத்தின் பிரமாண்ட வெற்றிக்குப் பிறகு இயக்குநர் எஸ் எஸ் ராஜமௌலி இயக்கத்தில் உருவாகும் புதிய படம் ஆர்ஆர்ஆர் (RRR).

இப்படத்தில் ராம் சரண், ஜூனியர் என்டிஆர், ஆலியா பட், சமுத்திரக்கனி, அஜய் தேவ்கன் ஆகியோர் பலர் நடிக்கின்றனர்.

கிட்டத்தட்ட ரூ.350 கோடி பொருட்செலவில் உருவாகும் இந்தப் படம் கோமரம் பீம் மற்றும் சீதாராம ராஜூ ஆகிய சுதந்திர போராட்ட வீரர்களை மையப்படுத்திய படம் என்று கூறப்படுகிறது.

ராம் சரண் இந்தப் படத்தில் போலீஸ் அதிகாரியாக நடிக்கிறாராம். ராம் சரணின் 35ஆவது பிறந்தநாளை முன்னிட்டு ஆர்ஆர்ஆர் (RRR) படத்தில் ராம் சரணின் கதாபாத்திரம் அடங்கிய வீடியோ ஒன்று வெளியிடப்பட்டுள்ளது.

இந்த வீடியோவில் போலீஸ் கதாபாத்திரத்திற்குரிய பாணியில், உடல் கட்டமைப்புடன் இருக்கும் ராம் சரண் தீவிர உடற்பயிற்சி செய்யும் காட்சி இடம்பெற்றுள்ளது.

மேலும், அமைதியா நின்னா அவர் எரியுற தழை, சீறிப்பாஞ்சா வால் நட்சத்திரம், அவர் பக்கத்துல நெருங்கினால் மரணத்துக்கு வியர்த்து ஊத்தும், பாஞ்சு வர்ற தோட்டா எல்லாம், அவர் நின்னுன்னா நிக்கும், அவர் யார் தெரியுமா? ஏ அண்ணன், காட்டுக்கு மன்னன், அல்லூர் இஸ் சீதாராம ராஜூ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இப்படியெல்லாம் டயலாக் வருவதும், அதற்கேற்ப ராம் சரண் உடற்பயிற்சி செய்வதும் என்று அந்த வீடியோவில் காட்டப்பட்டுள்ளது.

இதனை பார்க்கும் போது இதற்கு முன்னதாக இது போன்ற ஒரு கதாபாத்திரத்தில் ராம் சரண் நடித்திருக்கமாட்டார் என்று தோன்றுகிறது.

அதோடு, பாகுபலி, பாகுபலி 2 ஆகிய படங்களை மிஞ்சும் அளவிற்கு இந்தப் படம் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

கடந்தசில தினங்களுக்கு முன்பு இப்படத்தின் டைட்டில் லோகோவுடன் கூடிய மோஷன் போஸ்டர் வெளியாகி சமூக வலைதளங்களில் வைரலானது.

இதில் ஒருபுறம் ஜூனியர் என்டிஆர் நீருக்கு அடியில் இருந்து ஓடி வருவது போன்றும், மறுபுறம் ராம் சரண் நெருப்பு பிழம்போடு ஓடி வருவது போன்றும் காட்டப்பட்டுள்ளது.

நடுவில், இருவரது கைகளும் பிணைக்கப்பட்டிருப்பது போன்று படத்தின் போஸ்டரில் காட்டப்பட்டுள்ளது.

டைட்டிலில் உள்ள ஒவ்வொரு RRR ஆரிலும், ராம் சரண் முகம் Left R, ஜூனியர் என்டிஆர் முகம் Right R மற்றும் இருவரது கைகளும் பிணைக்கப்பட்டிருப்பது Middle R போன்று காட்டப்பட்டுள்ளது.

அதோடு, டைட்டில் போஸ்டரில் இரத்தம் (Left R), ரணம் (Middle R), ரௌத்திரம் (Right R) என்றும், இந்தியா 1920 (India 1920) என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும், வரும் 2021 ஆம் ஆண்டு ஜனவரி 8 ஆம் தேதி படம் திரைக்கு வரும் என்று போஸ்டரிலேயே தெரிவிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து மோஷன் போஸ்டரில் பின்னணி இசையும் பக்க பலமாக அமைந்துள்ளது.

டைட்டில் லோகோவுடன் கூடிய ஆர்ஆர்ஆர் மோஷன் போஸ்டரை பார்க்கும் போது பாகுபலியை மிஞ்சும் அளவிற்கு இப்படம் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தெலுங்கு, தமிழ், ஹிந்தி மற்றும் கன்னடம் ஆகிய மொழிகளில் இப்படம் திரைக்கு வருகிறது.

SOURCER SIVAKUMAR
Previous articleகிரெடிட் கார்டு, பர்சனல் லோன் கட்டவேண்டுமா?
Next articleவிவசாயிகள் வழக்கம் போல் வயலில் வேலை செய்யலாம்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here