நீலாம்பரி ரம்யா கிருஷ்ணன் சென்ற காரில் சரக்கு பாட்டிகள் பறிமுதல்! நடிகை ரம்யா கிருஷ்ணன் சென்ற காரில் 100க்கும் அதிகமான மதுமான பாட்டில்களை போலீசார் பறிமுதல் செய்துள்ளதாக செய்தி வெளியாகி வருகிறது.
ரம்யா கிருஷ்ணன் சென்ற காரில் 100க்கும் அதிகமான மதுபான பாட்டிகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி வருகிறது.
தமிழ் சினிமாவில் ஏராளமான படங்களில் நடித்துள்ளவர் நடிகை ரம்யா கிருஷ்ணன். ஆனால், என்ன ரஜினிகாந்த் நடித்த படையப்பா படம் இன்றும் அவரது கதாபாத்திரத்தை பிரதிபலிக்கும் படமாக அமைந்துள்ளது.
தற்போது பாகுபலி படம் மூலம் உலகளவில் பிரபலமாகிவிட்டார். ராஜமாதா சிவகாமி என்ற கதாபாத்திரம் இன்று அதிகளவில் பேசப்பட்டு வருகிறது. தற்போது நாடு முழுவதும் கொரோனா பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில்,
சென்னையைத் தவிர மற்ற பகுதிகளில் மதுபானக் கடைகள் திறப்பதற்கு அரசு அனுமதி அளித்துள்ளது. மதுபிரியர்கள், சென்னையைத் தாண்டி சென்று மதுபாட்டிகள் வாங்கி வருவதை வழக்கமாக கொண்டுள்ளனர்.
இதன் காரணமாக, சோதனைச் சாவடிகளில் வாகன சோதனையில் போலீசார் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில், கிழக்கு கடற்கரை சாலையில், முட்டுக்காட்டில் உள்ள சோதனைச் சாவடியில் வாகனசோதனையில் போலீசார் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது, அந்த வழியாக வந்த காரை மறித்து சோதனை செய்தனர். அந்த காரில், நடிகை ரம்யா கிருஷ்ணன் மற்றும் அவரது சகோதரி வினயா கிருஷ்ணன் ஆகியோர் இருந்துள்ளனர்.
சோதனையின் போது அந்த காரில் 96 பீர் பாட்டில்கள், 8 மதுபாட்டிகள் இருந்ததாக செய்திகள் வெளியாகியுள்லது. இது குறித்து போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும், அந்த கார் டிரைவரை கைது செய்து பின்னர், சொந்த ஜாமீனில் விடுவித்துள்ளனர்.
ஆனால், ரம்யா கிருஷ்ணன் வந்த கார், அவரது சொந்த காரா? இல்லை வாடகை காரா? என்பது குறித்து போலீசார் எந்த தகவலும் வெளியிடவில்லை.