Home சினிமா கோலிவுட் கொரோனா பாதிப்பு: ராணா திருமணம் தள்ளி வைப்பு?

கொரோனா பாதிப்பு: ராணா திருமணம் தள்ளி வைப்பு?

240
0
Rana Daggubati Wedding Postponed

Rana Daggubati Wedding Postponed; கொரோனா பாதிப்பு: ராணா திருமணம் தள்ளி வைப்பு? ஹைதராபாத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், ராணாவின் திருமணம் தள்ளி வைக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி வருகிறது.

ராணா டகுபதி மற்றும் மிஹீகா பஜாஜ் திருமணம் தள்ளி வைக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி வருகிறது.

தல அஜித் நடித்த ஆரம்பம் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் நடிகராக அறிமுகமானவர் ராணா டகுபதி. அதன் பிறகு பாகுபலி, பாகுபலி 2 ஆகிய படங்களில் நடித்து தனது மார்க்கெட்டை உயர்த்தினார்.

இஞ்சி இடுப்பழகி, எனை நோக்கி பாயும் தோட்டா ஆகிய படங்களில் சிறப்புத் தோற்றத்தில் நடித்துள்ளார்.

தற்போது மடை திறந்து, காடன் ஆகிய படங்களில் நடித்து வருகிறார். இந்த நிலையில், தனது காதலி யார் என்பது பற்றியும், அவரது புகைப்படத்தையும் வெளிப்படையாகவே தெரிவித்துள்ளார்.

ஹைதராபாத்தைச் சேர்ந்த மிஹீகா பஜாஜ் தான் தனது காதலி என்று அவரை அறிமுகம் செய்துள்ளார்.

மிஹீகா பஜாஜ் ஹைதராபாத்தில் டியூ டிராப் டிசைன் ஸ்டூடியோஸ் என்ற நிறுவனத்தை நடத்தி வருகிறார். நிகழ்ச்சி மேலாண்மை (Event Management), ஆடை வடிவமைப்பு, பர்ஸ், ஹேண்ட்பேக் வடிவமைப்பு உள்ளிட்ட பணிகளை தனது டியூ டிராப் டிசைன் ஸ்டூடியோஸ் நிறுவனத்தின் மேலும் மேற்கொண்டு வருகிறார்.

அதோடு மாடலாகவும் இருந்து வருகிறார். சில விளம்பரங்களிலும், அட்டைப் படங்களிலும் தோன்றியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில், வரும் டிசம்பர் அல்லது அதற்கு முன்னதாக ராணாவின் திருமணத்தை நடத்த அவரது தந்தை சுரேஷ் பாபு திட்டமிட்டிருந்ததாக கூறியிருந்தார்.

இந்த நிலையில், திருமண தேதியை தள்ளி வைக்க இருவீட்டாரும் முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி வருகிறது.

ராணா திருமணத்திற்காக திட்டமிட்டுள்ள ஹைதராபாத்தில் கொரோனாவின் தாக்கம் அதிகரித்து வருகிறது. தெலுங்கானாவில் மட்டும் இதுவரை 4 ஆயிரத்திற்கும் அதிகமானோர் கொரோனா வைரஸ் காரணமாக பாதிக்கப்பட்டுள்ளனர்.

சென்னையில் எப்படியோ அதே போன்று ஹைதராபாத்திலும் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. இதன் காரணமாக திருமணத்திற்கு வரும் நண்பர்கள், உறவினர்கள் ஆகியோரது நலன் கருதி, ராணா வீட்டில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

SOURCER SIVAKUMAR
Previous articleஉடுக்கை இயக்குநர் பாலமித்ரன் திடீர் மரணம்!
Next articleதளபதி பர்த்டே ஸ்பெஷல்: மாஸ்டர் டிரைலர் வெளியீடு?

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here