Sethuraman Final Tribute; சேது உடலை சுமந்து சென்ற சந்தானம்! நடிகரும், டாகருமான சேதுராமனின் இறுதிச் சடங்கில் கலந்து கொண்ட சந்தானமும் அவரது உடலை சுமந்து சென்று இறுதி அஞ்சலி செலுத்தியுள்ளார்.
மருத்துவரும், நடிகருமான சேதுராமனின் இறுதிச் சடங்கு நடந்து முடிந்துள்ளது. கண்ணா லட்டு தின்ன ஆசையா படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானவர் நடிகர் சேதுராமன் என்ற சேது.
இந்தப் படத்தில் தான் சந்தானம் ஹீரோவாகவும், தயாரிப்பாளராகவும் வலம் வந்தார்.
இப்படத்தைத் தொடர்ந்து சேதுராமன், மீண்டும் சந்தானம், விசாகா சிங் கூட்டணியில் வாலிபராஜா படத்தில் நடித்தார்.
மேலும், சந்தானத்தில் சக்க போடு போடு ராஜா படத்திலும், 50/50 படத்திலும் நடித்தார். 50/50 என்ற படத்தில் சேது என்ற கதாபாத்திரமாகவே நடித்து சேதுவாகவே மறைந்தார்.
ஆம், மாரடைப்பு ஏற்பட்ட நிலையில், நேற்றிரவு உயிரிழந்துள்ளார். சேதுராமனின் மறைவு சினிமா பிரபலங்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.
சேதுவுக்கு 2016ல் உமா என்ற பெண்னுடன் திருமணம் நடைபெற்றது. அவர்களுக்கு சஹானா என்ற ஒரு வயது பெண் குழந்தை இருக்கிறது.
இளம் வயதில் அவரது மரணம் பேரதிர்ச்சியை கொடுத்திருப்பதாக பிரபல தயாரிப்பாளர் தனஞ்செயன் ட்விட்டரில் கூறியுள்ளார்.
சேது பற்றி பேசியுள்ள நடிகை அதுல்யா, “இது உண்மையிலேயே அதிர்ச்சியான செய்தி. அவர் இறந்துவிட்டார் என்பதை நம்பவே முடியவில்லை”என கூறியுள்ளார்.
“36 வயதிலேயே மரணமா.. இது நியாயமில்லை கடவுளே” என வெங்கட் பிரபு தன் அதிர்ச்சியை பதிவு செய்துள்ளார்.
இதே போன்று நடிகரும், சேதுவின் நண்பருமான காமெடி நடிகர் சந்தானம், எனது அன்பு நண்பர் டாக்டர் சேதுவின் மறைவில் அதிர்ச்சியும், மனச்சோர்வும் அடைந்தேன். அவரது ஆத்மா நிம்மதியாக ஓய்வெடுக்கட்டும் என்று பதிவிட்டிருந்தார்.
இவரைப் போன்று சினிமா பிரபலங்கள் பலரும் டுவிட்டர் மூலமாக இரங்கல் செய்தி பதிவிட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில், சேதுராமனின் இறுதிச் சடங்கு தற்போது நடந்துள்ளது. சேதுவின் இறுதிச் சடங்கில் கலந்து கொண்ட சந்தானம், அவரது உடலை சுமந்துபடி சென்று அவருக்கு இறுதி அஞ்சலி செலுத்தியுள்ளார்.