Vietnam Veedu; பாலக்காட்டு பக்கத்திலே ஒரு அப்பாவி ராஜா – வியட்நாம் வீடு 50 வருடம்! சிவாஜி கணேசன் நடிப்பில் வந்த வியட்நாம் வீடு திரைக்கு வந்து 50 வருடங்கள் ஆகிவிட்டது.
வியட்நாம் வீடு படம் திரைக்கு வந்து 50 வருடங்களை கடந்துள்ளது.
கடந்த 1970 ஆம் ஆண்டு ஆர் மாதவன் இயக்கத்தில் சிவாஜி கணேசன், பத்மினி, ஸ்ரீகாந்த், ரமா பிரபா, நாகேஷ், வி கோபாலகிருஷ்ணன் ஆகியோர் பலர் நடிப்பில் வெளிவந்த படம் தான் வியட்நாம் வீடு.
சிவாஜி புரோடக்ஷன்ஸ் சார்பில் சிவாஜியே இந்தப் படத்தை தயாரித்திருந்தார். கேவி மகாதேவன் இசை அமைந்திருந்தார். சிவாஜி நடித்து வெள்ளிவிழா கண்ட படங்களில் வியட்நாம் வீடு படமும் ஒன்று.
இந்தப் படத்தில் அமைந்துள்ள பாக்காட்டு பக்கத்திலே ஒரு அப்பாவி ராஜா, உன் கண்ணில் நீர் வழிந்தால், மை லேடி காட் பாடி, உலகத்தில் ஒருவனென ஆகிய பாடல்கள் காலத்தால் அழியாக பாடல்களாக அமைந்தன.
இன்றும் பாலக்காட்டு பக்கத்திலே என்ற பாடல் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்று வருகிறது.
பிள்ளைகளால் கைவிடப்பட்ட ஒரு பெற்றோரின் கதை. சுந்தரம் எழுதிய நாடகமே வியட்நாம் வீடு திரைப்படமாக உருவானது.
இப்படத்திற்கு பிறகு சுந்தரம், வியட்நாம் வீடு சுந்தரம் என்றே அழைக்கப்பட்டார். இந்த நிலையில், இந்தப் படம் திரைக்கு வந்து இன்றுடன் 50 ஆண்டுகள் ஆகியுள்ளது.
இதன் காரணமாக, ஹலோ ஆப்பில் டிரெண்டிங் பட்டியலில் 50YrsOfVietnamVeedu படம் இடம்பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.